சிவகார்த்திகேயனின் டாக்டர்- நேற்று ஏலியனுடன் லாலிபாப் - இன்று ஹீரோயினுடன் ஜாலி லுக்!
முகப்பு > சினிமா செய்திகள்சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் படத்தில் இருந்து புதிய புகைப்படத்துடன் ஷூட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் திரைப்படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலிப் குமார் இத்திரைப்படத்தை இயக்குகிறார். நானியின் கேங் லீடர் படத்தில் நடித்த ப்ரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் டாக்டர் படத்தின் படப்பிடிப்பில் இருந்து புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனும், நடிகை ப்ரியங்கா மோகனும் அதிகாலை நேரத்தில் பீச்சில் எடுத்த செல்ஃபி தற்போது ஆன்லைனை கலக்கி வருகிறது. டாக்டர் படத்தின் ஷூட்டிங் கோவாவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருக்க, சிவகார்த்திகேயனின் அயலான் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. ஏலியனுடன் லாலிபாப் சாப்பிடுவது போல் வெளியான அந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.