''தளபதி டான்ஸ்க்கு யாருலாம் Waiting ?'' - தயாரிப்பு நிறுவனம் அளித்த அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் இருந்து அவர் பாடிய குட்டிக் ஸ்டோரி பாடல் நல்ல வரவேற்பை  பெற்று வருகிறது. அனிருத் இசையில் வெளியான இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். இதனையடுத்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Thalapathy Vijay, Vijay Sethupathi, Anirudh, Master Kutty Story song Choreographer Dinesh Master

இந்நிலையில் இந்த படத்தை தயாரித்துள்ள எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் குட்டி ஸ்டோரி 10 மில்லியன் ஆனது குறித்து புரோமோ வெளியிட்டுள்ளது. அதில், யாருலாம் தளபதி டான்ஸ்க்கு வெயிட்டிங் ?  இதுக்கு விடையளிக்கும் போதே தினேஷ் மாஸ்டர் நடனம் எப்படி இருக்கும் என்ற உங்கள் எதிர்பார்ப்பை சொல்லுங்கள் என்று குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் குட்டி ஸ்டோரி பாட்டுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, ஷாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செயகிறார்.

Entertainment sub editor