சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' பட First Look - கையில் கத்தி, ரத்தக் கறை... மிரட்டலான போஸ்டர்
முகப்பு > சினிமா செய்திகள்சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இன்று (பிப்ரவரி 17) தற்போது அவர் நடித்து வரும் 'டாக்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விதவிதமான கத்திகள் அவரை சுற்றியிருக்க, கையில் ரத்த கறையுடன் கத்தியை பிடித்தபடி இருக்கிறார். அவரது இருக்கையின் கீழ் ரத்தம் குளம் போல் தேங்கியபடி இருக்கிறது. தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வைத்து பார்க்கும் போது, மருத்துவத்துறை சார்ந்த படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிஸ்டர் லோக்கல் தவிர்த்து வேலைக்காரன், ஹீரோ என சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து சமூக அக்கறை கொண்ட படங்களாக வெளியாவதால் இந்த படம் மருத்துவத்துறையில் உள்ள பிரச்சனைகளை வைத்து உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. எனினும் படம் வெளியானால் மட்டுமே இதுகுறித்து தெரியவரும்.
'டாக்டர்' படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்சன் மற்று கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். கோலமாவு கோகிலா படத்துக்கு பிறகு இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியா அருள் மோகன் நடிக்க, வினய் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
Here is the first look of my next #DOCTOR 😊👍#DoctorFirstLook pic.twitter.com/ztqfkG4TUY
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 17, 2020