www.garudabazaar.com

அமுதவாணனுக்கு தங்க மோதிரம் பரிசளித்த ராமராஜன்.. பிரபல நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ராமராஜன், நடிகர் அமுதவாணனுக்கு தங்க மோதிரம் ஒன்றை பரிசளித்துள்ளார்.

Actor Ramarajan Gifted Gold Ring to Amudhavanan

Image Credit : vijay television

Also Read | சொந்த ஊரில் ஊர் சுற்றிய பூஜா ஹெக்டே.. கடலில் பயணம் செய்த வைரல் PHOTOS!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 தமிழ், நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளராக அமுதவாணன் கலந்து கொண்டார்.

இறுதி போட்டிக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து அசிம், விக்ரமன், ஷிவின் உள்ளிட்ட 3 போட்டியாளர்கள் தகுதி பெற்றனர். இந்த இறுதி போட்டியில் அசீம்    பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் கமல்ஹாசனால்  அறிவிக்கப்பட்டார். அசீம்க்கு பரிசாக மாருதி சுசூகி பிரேஸா காரும், 50 லட்ச ரூபாய் காசோலை, வெற்றிக் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை விக்ரமனும் மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.

Image Credit : vijay television

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற அமுதவாணன் இறுதி போட்டிக்கு முன்னதாக பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு அவராகவே எலிமினேட் ஆனார்.

Image Credit : vijay television

அமுதவாணன், காமெடி நிகழ்ச்சிகளில் சத்யராஜ், ராமராஜன் போல நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் ராமராஜன், விஜய் டிவி சேனலில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப் போவது யாரு? சாம்பியன்ஸ் சீசன் - 4 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சின்னத்திரை நிகழ்ச்சியில் முதல்முறையாக நடிகர் ராமராஜன் கலந்து கொண்டார்.

Image Credit : vijay television

இந்த நிகழ்வில் நடிகர் ராமராஜன் போல நடித்து "மதுரை மரிக்கொழுந்து வாசம்" பாடலுக்கு நடனம் ஆடி அமுதவாணன் அசத்தினார். அப்போது நடிகர் ராமராஜனிடம், இந்த பாட்டுக்கு எத்தனை முறை டான்ஸ் ஆடுனீங்க? என கேள்வி எழுப்பினார். இதற்கு ஒரு முறை தான் என ராமராஜன் பதில் அளித்தார். உடனே பழனி பட்டாளம், "இவன் 3000 முறை ஆடியிருக்கான்" என கூற சிரிப்பலை எழுந்தது. "இந்த பாட்டுக்கு ஆடி என் ஊர்ல வீடே கட்டியிருக்கேன்னா பாத்துக்கங்க". என அமுதவாணன் ராமராஜனிடம் கூறினார்.   இச்சூழலில் அமுதவாணனை பாராட்டி தங்க மோதிரம் ஒன்றை நடிகர் ராமராஜன் பரிசளித்துள்ளார்.

Also Read | முதல் முறை பிரபல சின்னத்திரை காமெடி நிகழ்ச்சியில் நடிகர் ராமராஜன்.. கலகல பேச்சு!

அமுதவாணனுக்கு தங்க மோதிரம் பரிசளித்த ராமராஜன்.. பிரபல நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor Ramarajan Gifted Gold Ring to Amudhavanan

People looking for online information on Amudhavanan, KPY, KPY Champions Season 4, Ramarajan, Vijay tv will find this news story useful.