www.garudabazaar.com

முதல் முறை பிரபல சின்னத்திரை காமெடி நிகழ்ச்சியில் நடிகர் ராமராஜன்.. கலகல பேச்சு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

முதல்முறையாக நடிகர் ராமராஜன் பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

Ramarajan Attend KPY Champions Season 4 at Vijay TV

Image Credit : vijay television

Also Read | சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கார் பயணம்.. பார்த்திபன் பகிர்ந்த THROWBACK சம்பவம்!

நடிகர் ராமராஜன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். மக்கள் நாயகன் என தமிழ் சினிமா ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர்.

ராமராஜன், 1977 ஆம் ஆண்டு தொடங்கி சிறிய வேடங்களில் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். மண்ணுக்கேத்த பொண்ணு (1985) மூலம் இயக்குனராக அறிமுகமானார். 1986 இல் வெளியான நம்ம ஊரு நல்ல ஊரு திரைப்படத்தில் கதாநாயகனாக தனது அறிமுகம் ஆனார். இவர் கிராமம் சார்ந்த  திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

Ramarajan Attend KPY Champions Season 4 at Vijay TV

Image Credit : vijay television

இவரது கரகாட்டகாரன் (1989) திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. திரையரங்குகளில் இந்த படம் 400 நாட்கள் ஓடியது.  கரகாட்டக்காரன் படம் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றி அடைந்த படங்களில் மிகவும் முக்கியமான படமாகும்., மேலும் பல படங்களும் ராமராஜன் நடிப்பில்  நூறு நாட்கள் ஓடி  வசூலில் சாதனை புரிந்தவை‌.

அரசியலிலும் ஈடுபாடு கொண்ட ராமராஜன், 1998 ஆம் ஆண்டு திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியில் இருந்து  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக 12வது மக்களவைக்குத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Ramarajan Attend KPY Champions Season 4 at Vijay TV

Image Credit : vijay television

ராமராஜன், 2001 ஆம் ஆண்டு சீறி வரும் காளை படத்திற்கு பிறகு 2012 ஆம் ஆண்டு 'மேதை' படத்தில் நடித்து இருந்தார்.

தற்போது ராமராஜன் மீண்டும் ஹீரோவாக  தனது 45வது படமான சாமானியன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து டப்பிங் மற்றும் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தில் நடிகர் ராமராஜனுடன் எம்.எஸ். பாஸ்கர், ராதா ரவி ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர். ராகேஷ் இப்படத்தினை இயக்கி வருகிறார். மதியழகன் இப்படத்தினை தயாரிக்கின்றார். இப்படம் 5 மொழிகளில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Ramarajan Attend KPY Champions Season 4 at Vijay TV

Image Credit : vijay television

இந்நிலையில் நடிகர் ராமராஜன், விஜய் டிவி சேனலில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப் போவது யாரு? சாம்பியன்ஸ் சீசன் - 4 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சின்னத்திரை நிகழ்ச்சியில் முதல்முறையாக நடிகர் ராமராஜன் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியின் நடுவர்கள் மதுரை முத்து, தாடி பாலாஜி, ஆகியோர் ராமராஜனுக்கு மாலை அணிவித்து, நெற்கதிர் கொடுத்து வரவேற்றனர். "இது தான் முதல்முறையாக தான் கலந்து கொள்ளும் டிவி நிகழ்ச்சி" என ராமராஜன் பேசினார். மேலும் நடிகர் ராமராஜன், அமுதவாணன் & பழனி பட்டாளம் ஆகியோருடன் கலகலப்பாக பேசும் காட்சிகளும் வெளியாகி உள்ளன.

இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிறன்று மதியம் 1:30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

Also Read | சொந்த ஊரில் ஊர் சுற்றிய பூஜா ஹெக்டே.. கடலில் பயணம் செய்த வைரல் PHOTOS!

தொடர்புடைய இணைப்புகள்

Ramarajan Attend KPY Champions Season 4 at Vijay TV

People looking for online information on KPY, KPY Champions Season 4, Ramarajan, Vijay tv will find this news story useful.