www.garudabazaar.com
iTechUS

"அசிம்னா பயமா?.. விக்ரமன் கூட சண்டை வர்றப்போ".. சீக்ரெட் உடைத்த போட்டியாளர்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் சமீபத்தில் அமர்க்களமாக நடந்து முடிந்திருந்தது.

Amudhavanan opens up about vikraman and azeem exclusive

                                 Image Credit : Vijay Television

Also Read | "சினிமாவுக்கு வரணும்ன்னு அப்ப எண்ணமில்ல, இங்க எனக்கு போட்டின்னு".. ஆர்ஜே பாலாஜி Open டாக்!!

இந்த நிகழ்ச்சியில் ஆரம்பித்தில் கலந்து கொண்ட 21 போட்டியாளர்களும் ஒவ்வொரு விதத்தில் திறம்பட இருந்ததால் யார் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பு ஒவ்வொரு வாரமும் அதிகரித்த வண்ணம் தான் இருந்தது. இறுதியில் அசிம் டைட்டில் வின்னராக தேர்வாகி இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து பல நாட்கள் ஆகியும் தொடர்ந்து பிக் பாஸ் குறித்த கருத்துக்கள் இணையத்தில் பரவலாக இருந்து வருகிறது. அதே போல, பல போட்டியாளர்கள் குறித்து ஏராளமான கருத்துக்களும் இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.

Amudhavanan opens up about vikraman and azeem exclusive

Image Credit : Vijay Television

அந்த வகையில், பிக் பாஸ் போட்டியாளராக களமிறங்கி இருந்த அமுதவாணனும் அசத்தலான போட்டியாளராக வீட்டிற்குள் வலம் வந்திருந்தார். விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் தன்னை ஒரு சிறந்த காமெடியன் மற்றும் கலைஞனாக முன்னிறுத்திய அமுதவாணன், சக போட்டியாளர்கள் மத்தியில் தன்னுடைய காமெடி திறமை மூலம் தொடர்ந்து பலரையும் சிரிக்க வைத்ததுடன் மட்டுமில்லாமல், பல பார்வையாளர்களின் ஃபேவரைட் ஆகவும் இருந்தார்.

Amudhavanan opens up about vikraman and azeem exclusive

Image Credit : Vijay Television

அனைத்து போட்டியாளர்களையும் கலகலவென வைத்திருந்த அமுதவாணன், Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்று முதல் ஆளாக Finale வாரத்துக்கு முன்னேற்றம் கண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, பணப்பெட்டி வைக்கப்பட அதிலிருந்த தொகையை எடுத்துவிட்டு Finale-க்கு முன்னேறாமல் பிக் பாஸ் வீட்டில் இருந்தும் வெளியேறி இருந்தார்.

இந்த நிலையில், தற்போது Behindwoods நேயர்களுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும், தன்னுடன் ஆடிய போட்டியாளர்கள் குறித்தும் நிறைய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

Amudhavanan opens up about vikraman and azeem exclusive

அப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் நிறைய இடங்களில், அசிம் ஏதாவது எகிறி பேசினால், நீங்கள் மௌனம் ஆகி விடுவதாகவும், அசிம் என்றால் பயமா என்ற கேள்வியும் அமுதவாணன் முன்பு வைக்கப்படுகிறது. இதற்கு பதில் சொல்லும் அமுதவாணன், "யார் மேலையும் எனக்கு பயம் எல்லாம் கிடையாது. மரியாதை வேணா குடுப்பேனே தவிர பயம் கிடையாது. அவர் கத்துனா நான் திருப்பி கத்தணும்னு அவசியம் கிடையாதுல்ல. நார்மலா சொல்லிப் பார்த்தேன் மீறி கத்தினா, பாக்குறவங்களுக்கு நல்லா இருக்காது அது எனக்கே பிடிக்காது. அசிம் இல்ல, விக்ரம்னுக்கும் எனக்கும் சண்டை வரும் போது கூட, ஒரு லெவல் அப்புறம் பேசுனேன், அதுக்கப்புறம் அவரும் கத்த ஆரம்பிச்சுருவாரு. அப்பகூட நானும் என்ன கேக்கணும்ன்னு நினைச்சேனோ அதைத்தான் சொன்னேனே தவிர, கத்தல.

சில பேர் கோபத்துல என்ன பேசணும் தெரியுமா பயங்கரமா கத்திட்டு இருப்பாங்க. நான் நிறைய தடவை அசிம்கிட்ட சொல்லுவேன், எதுக்கு அசிம் கத்திட்டே இருக்கன்னு. ரெண்டு, மூணு நேரத்துல திட்டுனாப்ல. அப்போ ஒரு தடவை அசிம கூப்பிட்டு, 'எனக்கு உன்னை புடிக்கும். இங்க நான் சண்டை போடுறதுக்காக எல்லாம் வரல.  ஜாலியா வந்து காமெடி பண்ணிட்டு 100 நாள் இருந்துட்டு போகணும்ன்னு நினைக்குறேன்'ன்னு சொன்னேன்" என விளக்கம் அளித்துள்ளார்.

Also Read | "Fans மீட் ஓகே, இது என்னண்ணே Haters மீட்டு?".. RJ பாலாஜி கலாய்.. ஒவ்வொரு காமெடியும் ஒவ்வொரு ரகம்!!

"அசிம்னா பயமா?.. விக்ரமன் கூட சண்டை வர்றப்போ".. சீக்ரெட் உடைத்த போட்டியாளர்!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Amudhavanan opens up about vikraman and azeem exclusive

People looking for online information on Amudhavanan, Amudhavanan opens up about vikraman and azeem, Azeem, Vikraman will find this news story useful.