www.garudabazaar.com

"சண்டைப் போட்டு அந்த பேரை வச்சோம்".. KPY சீசன் 4-ல் மனம் திறந்த விக்ரமன்! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட விக்ரமனின்  சமீபத்திய பேச்சு வைரலாகி வருகிறது.

BiggBoss Vikraman about Tamilnadu Tamilakam Name Issue in KPY 4

Image Credit : vijay television

Also Read | 1000 கோடி வசூல்.. பதான் படத்தின் டிக்கெட் விலையை குறைத்த தயாரிப்பாளர்! வைரல் அறிவிப்பு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 தமிழ், நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்,  கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, ஈழத்தை சேர்ந்த தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 21 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

BiggBoss Vikraman about Tamilnadu Tamilakam Name Issue in KPY 4

Image Credit : vijay television

இறுதி போட்டிக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து அசிம், விக்ரமன், ஷிவின் உள்ளிட்ட 3 போட்டியாளர்கள் தகுதி பெற்றனர். இந்த இறுதி போட்டியில் அசீம்    பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் கமல்ஹாசனால்  அறிவிக்கப்பட்டார். அசீம்க்கு பரிசாக மாருதி சுசூகி பிரேஸா காரும், 50 லட்ச ரூபாய் காசோலை, வெற்றிக் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை விக்ரமனும் மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற விக்ரமன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஆவார். மேலும் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

BiggBoss Vikraman about Tamilnadu Tamilakam Name Issue in KPY 4

Image Credit : vijay television

இந்நிலையில் ’கலக்கப்போவது யாரு சாம்பியன் சீசன் 4’ நிகழ்ச்சியில் விக்ரமன், அமுதவாணன், ஷிவின் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது விக்ரமனிடம், மதுரை முத்து ஒரு கேள்வி எழுப்பினார். அதில் "பிக்பாஸ்ல அவர் உள்ளே தமிழ்நாடு விஷயம் பேசிட்டு இருந்தார்.  வெளியேவும் அந்த விஷயம் நடந்துட்டு இருந்தது, இதை எப்படி நீங்கள் பீல் பண்றீங்க?" என கேட்டார். இதற்கு பதில் அளித்த விக்ரமன், "அதை சொன்ன போது  எனக்கு வியப்பா இருந்தது. எதேச்சையாக நடந்தது போல இருந்தது.  ஏன்னா பொங்கல் அன்னைக்கு நாம மறந்துட்ற ஒரு விஷயம் என்னன்னா தமிழ்நாடுனு நம்ம மாநிலத்துக்கு பெயர் வந்த நாள் அதான். பெரிய போராட்டத்திற்கு பிறகு அது நடந்தது.

BiggBoss Vikraman about Tamilnadu Tamilakam Name Issue in KPY 4

Image Credit : vijay television

தியாகி சங்கரலிங்கனார் என்றொரு மிகப்பெரிய தமிழறிஞர் 14 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அவரது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அவர் இறந்தே போயிட்டார்.  அடுத்து 1968-ல் மிகப்பெரிய போராட்டம். நாடாளுமன்றம்ல  போய் சண்டை போட்டு நம்ம பேரை மாத்துனோம்.  தமிழ்நாடுனு பேரை வச்சோம். அது முக்கியமான நாள்.   அதற்காக தியாகம் செய்த தலைவர்களுக்கு புகழ் வணக்கம் செய்யுற மாதிரி நாம பண்ண வேண்டியது இருக்கு. அதனால் அதை  நான் சொன்னேன். ஆனால் அந்த தருணத்தில் வெளியே இந்த சம்பவம் போயிட்டு இருக்கு என்று எனக்கு தெரியாது". என விக்ரமன் பதில் அளித்தார்.

Also Read | சந்திரமுகி- 2 படத்தில் இணைந்த பிரபல நடிகைகள்.. புகைப்படங்களுடன் வெளியான சூப்பர் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss Vikraman about Tamilnadu Tamilakam Name Issue in KPY 4

People looking for online information on BiggBoss Vikraman, KPY 4, Vikraman will find this news story useful.