www.garudabazaar.com
iTechUS

“அடுத்தடுத்து நிறைய படங்கள்”.. அடடே.. பிக்பாஸ் ஜனனியின் வெள்ளித்திரை பிரவேசம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் சமீபத்தில் அமர்க்களமாக நடந்து முடிந்திருந்தது.

Amudhavanan about Janany movie chances after bigg boss

                                                      Image Credit :  vijay television

Also Read | "மோதல்ல ஆரம்பிச்ச நட்பு".. வெளியே வந்ததும் போன் பண்ணிய விக்ரமன்.. அமுதவாணன் Breaks

இந்த நிகழ்ச்சியில் ஆரம்பித்தில் கலந்து கொண்ட 21 போட்டியாளர்களில் இருந்து அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்தனர். இதில், அசிம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் தன்னை ஒரு சிறந்த காமெடியன் மற்றும் கலைஞனாக முன்னிறுத்திய அமுதவாணன் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இருந்தார். அங்கும் சக போட்டியாளர்கள் மத்தியில் தன்னுடைய காமெடி திறமை மூலம் தொடர்ந்து பலரையும் சிரிக்க வைத்ததுடன் மட்டுமில்லாமல், பல பார்வையாளர்களின் ஃபேவரைட் ஆகவும் இருந்தார்.

Amudhavanan about Janany movie chances after bigg boss

Image Credit :  vijay television

அனைத்து போட்டியாளர்களையும் கலகலவென வைத்திருந்த அமுதவாணன், Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்று முதல் ஆளாக Finale வாரத்துக்கு முன்னேற்றம் கண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, பணப்பெட்டி வைக்கப்பட அதிலிருந்த தொகையை எடுத்துவிட்டு Finale-க்கு முன்னேறாமல் பிக் பாஸ் வீட்டில் இருந்தும் வெளியேறி இருந்தார்.

இதனையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் அவரது ஊர் மக்கள் அமோக வரவேற்பை அளித்ததுடன் மேளம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் கொண்டு அவரை கொண்டாடவும் செய்திருந்தனர்.

Amudhavanan about Janany movie chances after bigg boss

Image Credit :  vijay television

இதனிடையே, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அமுதவாணன், லைவ் வீடியோ ஒன்றில் பிக் பாஸ் போட்டிக்கு பிறகு தனது வாழ்க்கை மாறியது குறித்தும், சக போட்டியாளர்கள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை அமுதவாணன் பகிர்ந்து கொண்டார்.

அதே போல ஜனனி குறித்தும் சில கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார். முன்னதாக, ஜனனி மற்றும் அமுதவாணன் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்த சமயத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டில் ஜனனி எலிமினேட் ஆகி இருந்த சமயத்தில் அதற்கு அமுதவாணன் தான் காரணம் என்ற விமர்சனமும் எழுந்திருந்தது. இது தொடர்பாக பிக் பாஸ் வீட்டிலேயே தனது விளக்கத்தை அமுதவாணன் கொடுத்திருந்தார்.

Amudhavanan about Janany movie chances after bigg boss

Image Credit :  vijay television

இந்த நிலையில் தற்போது ஜனனி குறித்து பேசி இருந்த அமுதவாணன், "ஜனனி கூட உண்மையா ஒரு நல்ல ஒரு ஃப்ரெண்ட்ஷிப். அவங்க பேசும்போது ரொம்ப ஜாலியா இருக்கும். நீங்களே பாருங்க அடுத்தடுத்து நிறைய படங்கள் எல்லாம் அவங்க பண்றாங்க. படங்கள் பண்ணும் போது நீங்களே அதெல்லாம் பாத்து என்ஜாய் பண்ணுவீங்க. நீங்க எப்படி என்ஜாய் பண்ணுவீங்களோ, அதே மாதிரி தான் நானும் என்ஜாய் பண்ணேன்" என தெரிவித்தார்.

Amudhavanan about Janany movie chances after bigg boss

ஏற்கனவே, பிக் பாஸ் ஃபினாலேவின் போது தனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்துள்ளதாகவும் கமல்ஹாசனிடம் ஜனனி தெரிவித்திருந்தார். அதனை உறுதியாக்கும் வகையில் தற்போது அமுதவாணனும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளதால், ஜனனிக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் வந்துள்ளதும் ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.

Also Read | அதிர்ச்சி!! டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான டான்சர் பிறந்த நாளில் மரணம்.!!

தொடர்புடைய இணைப்புகள்

Amudhavanan about Janany movie chances after bigg boss

People looking for online information on Amudhavanan, Amudhavanan about Janany movie chances, Janany will find this news story useful.