www.garudabazaar.com

டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது எமோஷனல் ஆகி அழுத VJ பிரியங்கா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏறக்குறைய 90களின் பிற்பகுதியில் தமிழில் சாட்டிலைட் டிவி சேனல்கள் வளர்ச்சி அடைந்தன. தற்போதைய காலங்களில் பல டிஜிட்டல் நிறுவனங்களில் இயங்கி வருகின்றன. சேனல்களைப் பொறுத்தவரை சாட்டிலைட் சேனல்களும் இயங்கி வருகின்றன. சாட்டிலைட் சேனல்களும் டிஜிட்டலில் தங்களுடைய தளத்தை வலுவாக நிறுவி இருக்கின்றன. எது எப்படி இருந்தாலும் வெகுஜன மக்கள் வீடுகளில் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தி விடவில்லை. என்னதான் ஸ்மார்ட் போன் யுகம் வந்தாலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்திலிருந்தும் தனித்துவமாக விளங்கி வருகின்றன.

VJ Priyanka Cries in vijay tv super singer season 9

VJ Priyanka Cries in vijay tv super singer season 9

தொலைக்காட்சிக்கான பிரத்தியேக நிகழ்ச்சிகள் அதற்கான வடிவமைப்புகள் என எல்லாமே இன்னும் அதற்குரிய பிரம்மாண்டத்துடன் இருப்பதை காண முடிகிறது. அந்த வகையில் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு சேனலாக தமிழகத்தில் பிரபலமான சேனல் விஜய் டிவி. தொடக்க காலத்தில் விஜய் டிவி என்கிற பெயரிலும் பிற்காலத்தில் ஸ்டார் விஜய் என்கிற பெயரிலும் வளர்ச்சி அடைந்த விஜய் டிவி, பின்னர் திரைப்படங்கள் மற்றும் த்ரோபேக் நிகழ்ச்சிகளுக்காக விஜய் சூப்பர், பாடல்களுக்காக விஜய் மியூசிக் ஆகிய உப சேனல்களை தொடங்கியது. இந்த சேனல்களுக்கும் பெரும் வரவேற்பு உண்டானது.

சீரியல்கள், காமெடி நிகழ்ச்சிகள், ஆடல், பாடல் மற்றும் விவாத நிகழ்ச்சி என பல்சுவை நிகழ்ச்சிகளை பல்வேறு பார்வையாளர்களுக்கு தகுந்தாற்போல் ஒளிபரப்பு செய்யும் விஜய் டிவி, குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற பெருவாரியான ரசிகர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. அதிலும் விஜய் டிவி விஜய் டிவியின் அடையாளம் என்று சொல்லும் அளவுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும், ஜோடி நம்பர் ஒன் என்கிற நிகழ்ச்சியும் பிரபலமாக இருக்கின்றன. அவ்வகையில் அண்மையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9வது சீசன் தொடங்கியது.

இந்த சீசனில் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், ஸ்வேதா மோகன், பென்னி தயால் ஆகியோர் நடுவர்களாக இருக்கின்றனர். 

VJ Priyanka Cries in vijay tv super singer season 9

இந்நிகழ்ச்சியின் தேவா ராகம் ரவுண்டின் ப்ரோமோவில் இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா, நடுவராக இருக்கிறார்.

VJ Priyanka Cries in vijay tv super singer season 9

இதில் போட்டியாளர் சந்திரன் குறித்த ஏவி வீடியோவை பகிரும்போது, அவர் தம் தாய் பற்றி உருக்கமாக பேசுகிறார்.

VJ Priyanka Cries in vijay tv super singer season 9

சிங்கிள் மதராக (கணவரை இழந்த தாய்) 12 வருடமாக வீட்டு வேலை செய்தெல்லாம் தங்களை தங்கள் தாய் வளர்த்தது குறித்து சந்திரன் உருக்கமாக பேசும்போது எமோஷனல் ஆன விஜே பிரியங்கா, “சிங்கிள் பெற்றோராக பிள்ளைகளை வளர்க்கும் அனைத்து சிங்கிள் பெற்றோருக்கும் லவ் யூ.! அம்மா ஐ லவ் யூ!” என எமோஷனலாக பேசுகிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

VJ Priyanka Cries in vijay tv super singer season 9

People looking for online information on Super singer 9, Super singer season 9, VJ Priyanka will find this news story useful.