www.garudabazaar.com
iTechUS

"இதுக்கு மேல என்னங்க கேட்டுட போறாரு?!".. ஊர் மக்கள் வரவேற்பை பார்த்து நெகிழந்த அமுது.. வீடியோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் சமீபத்தில் அமர்க்களமாக நடந்து முடிந்திருந்தது.

Amudhavanan warm welcome by native people after bigg boss

இந்த நிகழ்ச்சியில் ஆரம்பித்தில் கலந்து கொண்ட 21 போட்டியாளர்களும் ஒவ்வொரு விதத்தில் திறம்பட இருந்ததால் யார் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பு ஒவ்வொரு வாரமும் அதிகரித்த வண்ணம் தான் இருந்தது. இதனைத் தொடர்ந்து, இறுதியில் அசிம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இருந்த நிலையில் இதில் டைட்டில் வின்னராக அசிம் தேர்வாகி இருந்தார்.

அசிம் வெற்றி பெற்றாலும் மற்ற பல போட்டியாளர்களுக்கும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் அங்கீகாரமும், ஆதரவும் கிடைத்திருந்தது. அதில் குறிப்பிடத்தக்க ஒருவராக திகழ்ந்தவர் அமுதவாணன்.

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் தன்னை ஒரு சிறந்த காமெடியன் மற்றும் கலைஞனாக முன்னிறுத்திய அமுதவாணன் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இருந்தார். அங்கும் சக போட்டியாளர்கள் மத்தியில் தன்னுடைய காமெடி திறமை மூலம் தொடர்ந்து பலரையும் சிரிக்க வைத்ததுடன் மட்டுமில்லாமல், பல பார்வையாளர்களின் ஃபேவரைட் ஆகவும் இருந்தார்.

அனைத்து போட்டியாளர்களையும் கலகலவென வைத்திருந்த அமுதவாணன், Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்று முதல் ஆளாக Finale வாரத்துக்கு முன்னேற்றம் கண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, பணப்பெட்டி வைக்கப்பட அதிலிருந்த தொகையை எடுத்துவிட்டு Finale-க்கு முன்னேறாமல் பிக் பாஸ் வீட்டில் இருந்தும் வெளியேறி இருந்தார்.

பிக் பாஸின் சிறந்த போட்டியாளர்களில் ஒருவராக வலம் வந்த அமுதவாணனுக்கு தற்போது மிகப்பெரிய அளவிலான அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி அமுதவாணனுக்கு அவரது குடும்பத்தினர், உறவினர்கள், ஊர் மக்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வெகு விமரிசையாக வரவேற்பை கொடுத்துள்ளனர்.

மேளதாளம் அடித்தும், ஆரத்தி எடுத்தும், பொன்னாடை போர்த்தியும் அதிரடியான வரவேற்பும் அமுதவாணனுக்கு அளிக்கப்பட்டு இருந்தது. அதேபோல மற்றொரு பொது நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட போதும் மக்கள் அனைவரும் உற்சாகமான வரவேற்பு அளித்திருந்தனர். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு மனம் நெகிழ்ந்து போயுள்ளார் அமுதவாணன்.

 

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Amudhavanan warm welcome by native people after bigg boss

People looking for online information on Amudhavanan, Bigg boss 6 tamil will find this news story useful.