அனுஷ்காவின் 'நிசப்தம்' படத்தில் மாதவன் வேடம் என்ன தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 07, 2019 12:53 PM
அனுஷ்கா முதன்மை வேடத்தில் நடித்து வரும் படம் 'நிசப்தம்'. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த படத்தை கோனா வெங்கட் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பாக டி.ஜி.விஸ்வபிரசாத் தயாரிக்கின்றனர்.
![Madhavan's Character revealed in Anushka's Nishabdham Madhavan's Character revealed in Anushka's Nishabdham](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/madhavans-character-revealed-in-anushkas-nishabdham-photos-pictures-stills.jpg)
ரெண்டு படத்துக்கு பிறகு மாதவன் இந்த படம் மூலம் அனுஷ்காவுடன் இணைந்துள்ளார். இந்த படத்தில் அனுஷ்காவின் கதாபாத்திரம் குறித்த போஸ்டர் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்த போஸ்டரின் படி வாய் பேசாத காது கேளாத சாக்ஷி என்ற வேடத்தில் அனுஷ்கா நடித்துள்ளார். அவர் ஓவியம் வரைவது போன்று போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த படத்தில் மாதவனின் கேரக்டர் குறித்த போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. போஸ்டரின் படி மாதவன் ஆண்டனி என்கிற இசைக் கலைஞராக நடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags : Nishabdham, Anushka Shetty, Madhavan