ஆர்யாவின் புதிய படத்தில் நடிக்கும் 'பிக்பாஸ் 3' மூலம் பிரபலமான நடிகை
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 15, 2019 07:14 PM
மகாமுனி படத்துக்கு பிறகு ஆர்யா தற்போது இயக்குநர் சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் 'டெடி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக அவரது ரியல் ஜோடி சாயிஷா நடிக்கிறார். இந்த படத்தில் சதீஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் சாக்ஷி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் சதிஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், சாக்ஷி பிக்பாஸில் பாடுவது போல் ஹவ்வ ஹவ்வா என்று பாடுகிறார். அதனை பார்க்கும் சாக்ஷி சதிஷை அடிக்கவருகிறார்.
Tags : Teddy, Arya, Sayyeshaa Saigal, D.Imman, Sathish, Sakshi Agarwal