“மொத்தமா 28 ஆயிரம் பேர்!”.. டிஸ்னி பூங்கா நிர்வாகம் செய்த அதிரடி காரியம்.. ஸ்தம்பித்து போன ஊழியர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா நெருக்கடி காரணமாக உண்டான நஷ்டத்தை சமாளிக்க அமெரிக்காவில் தனது பணியாளர்கள் 28,000 பேரை டிஸ்னி பூங்கா அதிரடியாக வேலையை விட்டு நீக்கவுள்ளது.
இதுகுறித்து டிஸ்னி பூங்கா தலைவர் ஜோஷ் டி அமரோ தமது பணியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், இப்போதைக்கு சாத்தியப்படும் ஒரே வழி இது மட்டும்தான். கலிபோர்னியாவில் டிஸ்னிலேண்ட் மூடப்பட்டுள்ளது. இதேபோல், கலிபோர்னியா அரசு நிர்வாகம் டிஸ்னிலேண்டை மீண்டும் திறக்க ஏதுவாக, கட்டுப்பாடுகளை நீக்க விரும்பவில்லை என்றும் அமரோ தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த கடிதத்தில், கடந்த மார்ச் 2-வது வாரத்திலிருந்து டிஸ்னிலேண்ட் மூடப்பட்டுள்ளது. இதேபோல் ஆர்லாண்டோவில் இருக்கும் வால்ட் டிஸ்னி வேர்ல்டும் மார்ச் மாதத்திலிருந்து மூடப்பட்டது. ஆனாலும் ஜூலை மத்தியில், பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும், குறைந்த பார்வையாளர்கள் அனுமதியுடனும் மட்டுமே திறக்கப்பட்டது.
அத்துடன் தொழிலாளர் சங்கங்களைச் சேராத, அதே சமயம் பாதிக்கப்பட்ட பணியாளர்களை வரும் நாட்களில் சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிஸ்னிலேண்ட் மற்றும் வால்ட் டிஸ்னி வேர்ல்டில் வேலைபார்த்த இந்தப் பணியாளர்களில், மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்கள் பகுதி நேர பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.