அதெல்லாம் 'அடிக்க' மாட்டான்... தமிழில் 'டிப்ஸ்' கொடுத்த கேப்டன்... யாரைப்பார்த்து என்ன வார்த்தை சொன்னீங்க?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியின் பவுலிங் படை ராஜஸ்தான் அணியின் அனுபவ வீரர்களை ஆடிப்போக செய்தது. 37 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வென்று பாயிண்ட் டேபிளில் 2-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. அந்த அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தமிழர் என்பதால் தமிழக ரசிகர்களும் கொல்கத்தா அணியின் ஆட்டத்தை உற்றுநோக்கி வருகின்றனர்.
![Dinesh Karthik and Varun Chakravarthy\'s Tamil Conversation goes Viral Dinesh Karthik and Varun Chakravarthy\'s Tamil Conversation goes Viral](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/dinesh-karthik-and-varun-chakravarthys-tamil-conversation-goes-viral.jpg)
இந்த நிலையில் நேற்றைய போட்டியின் போது தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி பவுலிங் செய்தபோது தினேஷ் கார்த்திக்கிடம் ஆலோசனை கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது. ராகுல் திவேதியாவுக்கு பவுலிங் செய்ய வந்த வருண் தினேஷிடம் எங்கு பந்தை போட வேண்டும் என்பது போல கேட்கிறார். பதிலுக்கு தினேஷ், ''போடு போடு அதெல்லாம் அடிக்க மாட்டான்,'' என தமிழில் சொல்கிறார்.
அதேபோல வருண் சக்கரவர்த்தி பந்தில் ராகுல் போல்டாகி 14 ரன்களில் ஆட்டமிழந்தார். கடந்த முறை ருத்ரதாண்டவம் ஆடி அணியை கரை சேர்த்த, ராகுல் திவேதியாவை சரியாக கணித்த தினேஷ் கார்த்திக்கின் ஆருடம் ரசிகர்களை புல்லரிக்க வைத்துள்ளது. இதையடுத்து தினேஷ் கார்த்திக், ராகுலை வைத்து ரசிகர்கள் ஜாலி மீம்ஸ் போட்டு டைம்பாஸ் செய்து வருகின்றனர். என்ன ஒரு துல்லியமான கணிப்பு!
Those Tamil Covos between DK and Chakravarthy 😂👌🏻
*Tewatia on strike*
Chakravarthy asks DK something (like where to bowl)
DK : “Podu, Podu, Athellam adika maatan, Paathuklaam”
*Tewatia gets bowled*#DK 🔥 #KKRvsRR #IPL2020
— Daniels (@ebypauldaniel) September 30, 2020
@DineshKarthik to #varunchakravarthy 😂😂😂😂#KKRvRR #KKR #RR #IPL2020 pic.twitter.com/BnYOBtkagR
— Suresh-EAV (@SureshEav) September 30, 2020
Ha ha😍😍😍 Tamil...💖#KKRvRR #Karthik #Varunchakravarthy #KKR #RR pic.twitter.com/zN9U6SgRUz
— Mr. Cricketer (@MrCrick04367183) September 30, 2020
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)