மறைந்த பாடகர் எஸ்.பி.பி-யின் 'பேவரைட்' டீம் இதுதானாம்... மருத்துவர்கள் வெளியிட்ட 'புதிய' தகவல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Oct 01, 2020 06:46 AM

பாடும் நிலா என ரசிகர்களால் புகழப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமண்யம் சமீபத்தில் மறைந்தார். அவரின் மறைவு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை அதிர வைத்துள்ளது. தொடர்ந்து அவர் குறித்த தகவல்களை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பகிர்ந்து வருவதால் சமூக வலைதளங்களில் எஸ்.பி.பி-யின் பெயர் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

Singer SP Balasubrahmanyam likes Chennai Super Kings

இந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தீபக் சுப்ரமணியன், நந்த கிஷோர் இருவரும் அவர் குறித்த புதிய தகவல்களை தற்போது பகிர்ந்து கொண்டுள்ளனர். அதன்படி பாடகர் எஸ்.பி.பி-க்கு கிரிக்கெட் மிகவும் பிடித்தமான விளையாட்டாம். அதேபோல ஐபிஎல் அணிகளில் சென்னை அணி அவரின் பேவரைட் அணி என மருத்துவர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.

Singer SP Balasubrahmanyam likes Chennai Super Kings

இந்த தகவல் தற்போது கிரிக்கெட் ரசிகர்களை உணர்ச்சி வசப்பட வைத்துள்ளது. பாடகர் எஸ்.பி.பி-யின் மறைவையடுத்து சென்னை ரசிகர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல சென்னை அணியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவரின் புகழ்பெற்ற பாடல் வரிகளை பகிர்ந்து இரங்கல் தெரிவித்து இருந்தது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Singer SP Balasubrahmanyam likes Chennai Super Kings | Sports News.