"அடுத்த 6 மாசம் அள்ளு விடப் போகுது!.. முடிஞ்சா இத பண்ணுங்க".. 'மீண்டும்' வேலையை காட்டும் 'கொரோனா'!.. அப்படியே 'அந்தர் பல்டி' அடித்த 'நாடு'!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் ஊழியர்கள் மீண்டும் பணியிடங்களுக்கு செல்ல வேண்டும் என்று தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு கொண்டிருந்த அரசு தற்போது திடீரென மாறுபட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் அமைச்சரவை அலுவலக அமைச்சர் அமைக்கும் அந்த புதிய கட்டுப்பாடுகள் என்ன என்று அமைச்சரவை அலுவலக அமைச்சர் மைக்கேல் கோவ் சூசகமாக முன்கூட்டியே குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாக இந்த கொரோனா சூழலில் நாம் சமநிலையை அடைய முயற்சிக்கிறோம் என்று கூறிய மைக்கேல் கோவ், இந்த நடவடிக்கைகளை யாரும் எடுக்க விரும்பவில்லை, ஆனால் அவை யாராலும் மகிழ்ச்சியுடன் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களுக்கும் பணியிடங்களுக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி பிரிட்டன் அரசு பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில் மக்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய முடிந்தால் செய்யுங்கள் அதுவே சிறந்தது என்று மைக்கேல் கோவ் கூறினார்.
அத்துடன் கொரோனா வைரஸை தோற்கடிப்பதில் நாம் வெல்ல முடிந்தால் நடவடிக்கைகள் தளர்த்தப்படும் என்றும் அடுத்த ஆறு மாதங்கள் நமக்கு சவாலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.