"அடுத்த 2 வருஷத்துக்கு சம்பள உயர்வு எப்படி இருக்கும்?".. நிபுணர்கள் சொல்வது இதுதான்! வெளியான அதிரடி ஆய்வுகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியா2022 ஆம் ஆண்டிற்குள் பொருளாதார நடவடிக்கைகளின வேகம் அதிகரிப்பதால் போனஸ் மற்றும் சலுகைகள் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் டெலாய்ட் இந்தியா தொழிலாளர் மற்றும் அதிகரிப்பு போக்குகளின் ஆய்வுப்படி, 2020 ஆம் ஆண்டில், சராசரி அதிகரிப்பு 2019 இல் 8.6 சதவீதத்திலிருந்து 3.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, வீட்டில் இருந்தே பணிபுரிவதற்கான மருத்துவ, காப்பீடு மற்றும் உள்கட்டமைப்பு போன்ற கூடுதல் சலுகைகளை நிறுவனங்கள் வழங்குவதால், போனஸ் மற்றும் சலுகைகள் அதிகரிப்புகள் எந்த நேரத்திலும் புதுப்பிக்கப்பட போவதில்லை என தெரிகிறது. சம்பள வெட்டுக்கள் கூட, பொருளாதார நடவடிக்கைகள் எவ்வளவு விரைவாக புத்துயிர் பெறுகின்றன என்பதைப் பொறுத்து, அதுவும் ஒரு வருடத்திற்குப் பிறகுதான் பழைய சம்பளத்தையே மீட்டெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. டெலாய்ட் இந்தியாவின் பங்குதாரர் ஆனந்தோருப் கோஸ் இதுபற்றி பேசும்போது, "இந்த ஆண்டு ஊதிய உயர்வு வழங்காத நிறுவனங்கள், தங்களது வணிக செயல்திறனில் ஒரு குறிப்பிட்ட முன்னேற்றத்தைக் காணும் வரை தாமதப்படுத்தும்" என்றும், அதே சமயம் வணிகங்கள் அடுத்த 8-12 மாதங்களுக்கு மந்தநிலையில் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, நிறுவனங்கள் பிராட்பேண்ட், எழுதுபொருள் போன்றவற்றுக்கான படி மற்றும் பிற சலுகைகளை வழங்கக்கூடும், ஏனெனில் பெரும்பாலான நிறுவனங்களில் WORK FROM HOME முறையில் இயங்குவது ஒரு வழக்கமாகிவிட்டது. "நிறுவனங்கள் கடினமான காலங்களில் ஊழியர்கள் தொடர்ந்து பாதுகாப்பு வலையை தங்களுக்கென உருவாக்கி வைத்திருப்பதை உறுதி செய்வதற்காக உடல்நலம், ஆரோக்கியம், காப்பீடு, WFH சலுகைகள் போன்ற நன்மைகளில் நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன" என்று நிபுணர்கள் கருதுகின்றனர். டெலோயிட்டில் தலைமை திறமை அதிகாரியும் பங்குதாரருமான எஸ்.வி.நாதன், "ஊழியர்களுக்கு வீட்டிலேயே தடையற்ற மற்றும் மிகவும் பயனுள்ள பணிச்சூழலை அமைப்பதற்கு ஊக்குவிப்பதே இதன் நோக்கம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
