'இப்போதான 22,000 பேர தூக்குனாங்க'... 'அதுக்குள்ள மறுபடியும் இத்தன ஆயிரம் பேரா?'... 'பிரபல நிறுவனம் கொடுத்த பேரதிர்ச்சியால்'... 'கலங்கி நிற்கும் ஊழியர்கள்!'...
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா பாதிப்பு காரணமாக பிரபல நிறுவனங்கள் பலவும் அடுத்தடுத்து ஆயிரக்கணக்கில் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் பெருமாலான விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் பல்வேறு விமான நிறுவனங்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதையடுத்து செலவை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் பல விமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும் ஒரு சில விமான நிறுவனங்களுக்கு அந்நிறுவனத்தை சேர்ந்த நாடுகள் நிதி உதவி செய்து வருவதால் அதன் ஊழியர்களின் வேலை உறுதிபடுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது ஜெர்மனியை தலைமையிடமாக கொண்ட லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனமும் அந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 1 லட்சத்து 38 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வந்த நிலையில், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட நிலைமையை சமாளிக்க ஜெர்மனி அரசிடம் இருந்து 9 மில்லியன் யூரோக்களை அந்நிறுவனம் பிணைத்தொகையாக பெற்றிருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம், கடனாளர்களுக்கு செலுத்தவேண்டிய தொகை, பராமரிப்பு உள்ளிட்டவைகளுக்கு அந்த தொகை செலவிடப்பட்டது.
இதனால் ஏற்பட்ட நிதிச்சுமை காரணமாக கடந்த ஜூன் மாதமே 22 ஆயிரம் ஊழியர்களை லுப்தான்சா நிறுவனம் பணி நீக்கம் செய்திருந்தது. இதையடுத்து தற்போது நிலைமை இன்னும் சரியாகாததால் தன்னுடைய ஊழியர்களில் மேலும் 28 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட உள்ள சூழலில், இதன்முலம் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரமாக அதிகரிக்க உள்ளது.

மற்ற செய்திகள்
