"மறுபடியும், முதல்ல இருந்தா??!"... - 'மீண்டும் இடியாக வந்து இறங்கும்... H1B விசா விவகாரம்!'... புதிய சிக்கலால் கலங்கி நிற்கும் IT ஊழியர்கள்!!!
முகப்பு > செய்திகள் > வணிகம்H1B விசா தொடர்பான ஒரு புதிய பரிந்துரையால் இந்திய ஐடி ஊழியர்களுக்கு புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது.

அமெரிக்காவின் தொழிலாளர் துறையான US Department of Labour, H1B விசா மற்றும் வேலை சார்ந்த பச்சை அட்டை தாரர்களுக்கான (Employment-based Green Card Holders) சம்பளம் தொடர்பாக Office of Management and Budgetக்கு ஒரு பரிந்துரை செய்துள்ளதாகவும், இந்த பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டு அனுமதி கிடைத்தால் உடனடியாக அமலுக்கு வந்துவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகாதபோதும், H1B விசாதாரர்களுக்கு சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க வேண்டும் அதில் சொல்லப்பட்டால், எல்லா கம்பெனிகளும் இந்த விதியை கடைபிடிக்க வேண்டி இருக்கும் என்பதால் அவற்றிற்கு செலவு அதிகரிக்கும். குறிப்பாக, இந்த H1B விசாவால் அதிகம் பயனடையும் கம்பெனிகள் ஐடி துறை சார்ந்தவையாக உள்ள நிலையில், அதிலும் சுமாராக 70 சதவிகிதம் விசாக்களை நம் இந்தியர்கள் மட்டுமே பெறுகிறார்கள்.
இதன்காரணமாக கம்பெனிகள் கூடுதல் செலவு செய்து இந்தியர்களை H1B விசாவில் வேலைக்கு எடுப்பதற்கு பதிலாக, அமெரிக்காவில் அமெரிக்கர்களையே வேலைக்கு எடுப்பது அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படியே போனால் H1B விசா மூலம் அமெரிக்காவுக்குள் நுழையும் இந்தியர்களுக்கு, வேலை கிடைப்பது கணிசமாக குறையலாம் எனவும், இவை எல்லாமே அமெரிக்க தொழிலாளர் துறையின் பரிந்துரையிலும் அதை அனுமதிப்பதிலுமே உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
