‘2 காய் மட்டும் திருடவும்’.. வீட்டு உரிமையாளரின் வினோத முயற்சி, வைரலாகும் போட்டோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Feb 23, 2019 06:42 PM
இணைய உலகில் தினமும் எதாவது ஒரு செய்தி வெளியாகி வைரலாகிய வண்ணம் உள்ளது, அதேபோல் ஒரு வீட்டு உரிமையாளர் எடுத்த வினோத முயற்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்றைய சூழ்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன் வந்துவிட்டது. மனிதனுக்குத் தேவையான உணவு, உடை உள்ளிட்டவற்றை வீட்டிலிருந்தபடியே இணையத்தின் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதி ஸ்மார்ட் போனின் மூலம் சாத்தியமானது. மேலும் பொழுதுபோக்கு விஷயங்கள் பலவும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அதனால் தினம்தினம் ஏதாவது ஒரு விஷயம் வைரலாகி கொண்டே இருக்கின்றது.
அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு சிறுவர்கள் சிலர் காலணியைக் கொண்டு செல்பி எடுப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதேபோல் எனக்கு சாப்பாடு தான் முக்கியம் என சொல்லும் சிறுவனது வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானதோடு அவர் ஒரு பிரபலமாகவே மாறிவிட்டார். இந்நிலையில் தற்போது ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீட்டு உரிமையாளர் ஒருவர் தனது வீட்டுக்கு முன்னால் சாலையோரமாக இருக்கும் முருங்கை மரத்தில் இருந்து, சாலையில் செல்பவர்கள் முருங்கைக் காய்களைப் பறித்து செல்வதைத் தடுக்கும் வகையில், ‘கிளையை ஒடிக்காமல் திருடவும்’ என்றும் ‘2 காய் மட்டும் திருடவும்’ என்றும் எழுதி அதை மரத்தில் தொங்கவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வளைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
