எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம்: குழந்தைக்கு எச்.ஐ.வி பரிசோதனை..வெளியான முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Mar 22, 2019 11:34 AM
கடந்த வருடம், சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியலையை உண்டுபண்ணியது.
அதன் பின்னர் நடந்த விசாரணையில், இந்த சம்பவத்துக்கு முன்பே, விருதுநகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரது எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தம், ரத்த வங்கியில் கொடுக்கப்பட்டதாகவும், அதனை அறிந்த அந்த இளைஞர் வந்து தகவல் சொல்வதற்குள் இவ்வாறு அசம்பாவிதம் நிகழ்ந்ததால், குற்றவுணர்ச்சியில் அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.
ஆனால், அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு தவறுதலாக எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தத்தை செலுத்தியதால் சில மருத்துவ ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதோடு, அந்த கர்ப்பிணி பெண்ணின் குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வதாக தமிழக சுகாதாரத் துறை உறுதி அளித்தது.
இதேபோல் அந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் சென்னையில் அரசு சார்புப் பணியும் பெற்றுத்தரப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி, அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் சில நாட்கள் கழித்து, குழந்தைக்கு பிசிஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அவை செங்கல்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவில், குழந்தைக்கௌ எச்.ஐ.வி பாதிப்புத் தொற்று இல்லை என தகவல்கள் கிடைத்துள்ளன.
அதுமட்டுமல்லாமல், மேலும் 6-வது மாதம் மற்றும் 18-வது மாதங்களில் அடுத்தடுத்த சோதனைகள் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.