பேஸ்புக் மூலம் பாலியல் தொல்லை.. அரசியல் பின்னணியா? குற்றவாளி வெளியிட்ட வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 04, 2019 11:19 AM

கோயமுத்தூரின் பொள்ளாச்சி பகுதியில் பாலியல் மோசடி செய்த இளைஞர் கும்பல் ஒன்று நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்ததாக, உள்ளூர் இளைஞர்களின் விசாரணையில் வெளியாகின திடுக்கிடும் தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

TN - youth gang abuses more than 100 girls and students

கோவை பொள்ளாச்சி அருகே எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சபரிநாதன் என்கிற 25 வயது இளம் பொறியாளர் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவிக்கு பேஸ்புக்கின் மூலம் அறிமுகமாகி சில நாட்கள் கழித்து ஊஞ்சலாம்பட்டிக்கு அப்பெண்ணை வரவழைத்துள்ளார். அங்கு தனது நண்பர்களான திருநாவுக்கரசு(25), சதீஷ்(28), வசந்தகுமார்(27) ஆகியோரையும் வரவழைத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணுக்கு நால்வரும் பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அப்பெண்ணுக்கு அந்த வீடியோவை வைத்து பல வழிகளிலும் தொல்லை கொடுத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் மனமுடைந்த அந்த மாணவி பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோர் பிடிபட்டனர். ஆனால் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு பிடிபடவில்லை. இதனிடையே புகார் அளித்த பெண்ணின் சகோதரரை தாக்கிய செந்தில் (33), பாபு (26), வசந்தகுமார் (26) உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், தலைமறைவாகவுள்ள திருநாவுக்கரசு என்பவர்தான் இந்த கும்பலில் முதன்மையானவர் எனறும், முகநூல் மூலம் பெண்களிடம் பேசி தன்வசப்படுத்தி தனக்குச் சொந்தமான ஆனைமலை சின்னப்பம்பாளைய பண்ணை வீட்டுக்கு வரச்சொல்லி தகாத முறையில் நடந்துகொண்டு அதனை நண்பர்களின் உதவியுடன் வீடியோ ஆதாரங்களாக எடுத்து வைத்துக்கொண்டு வசதியான பெண்கள் என்றால் லட்சக்கணக்கில் பணம், நகை என்று கேட்டு மிரட்டுவதையும் மற்ற பெண்களுக்கு மீண்டும் வற்புறுத்தி தொல்லை கொடுப்பதையும் வேலையாக வைத்திருக்கிறார் என்ரு தெரியவந்தது.

இந்த விவகாரத்தில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு முக்கிய குற்றவாளிகள் தேடப்பட்டு வருவதாக கோவை மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் தகவல் தெரிவித்த நிலையில், தலைமறைவான திருநாவுக்கரசு வாட்ஸாப் ஆடியோ ஒன்றை வெளியிட்டதாகவும், அதில் இவ்வழக்கில் முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் பலருக்கும் இந்த பாலியல் குற்றங்களில் தொடர்புகள் இருப்பதாகவும் அவர்களால் தனக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் வீடியோ ஒன்றையும் தற்போது வெளியிட்டுள்ள திருநாவுக்கரசு, உண்மைகளைச்சொல்லி, போலீஸாரிடம் தான் சரணடைய உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் தனக்கு ஒத்துழைப்பு தருமாறும் கூறியுள்ளார். 

Tags : #CRIME #ABUSE #YOUNGSTERS #BIZARRE