'ஃபிட்னஸ நிரூபிச்சு ஆஸ்திரேலியா போயும்'... 'ரோஹித் சர்மாவுக்கு எழுந்துள்ள புது சிக்கல்?!!'... 'அப்போ எப்போதான் அவரு விளையாடுவாரு???'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Dec 22, 2020 01:53 PM

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டியிலும் ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.

INDvsAUS Rohit Sharma Doubtful For Next Match Due To Lack Of Practice

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இடம்பெறவில்லை. முன்னதாக அவர் தன் ஃபிட்னஸை நிரூபித்தால் மட்டுமே அணிக்குள் சேர்க்கப்படுவார் என பிசிசிஐ கூறியதையடுத்து, ரோஹித் சர்மா பெங்களூரில் சிகிச்சை மற்றும் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு தன் ஃபிட்னஸை நிரூபித்தார். அதன்பின்னர் அவர் ஆஸ்திரேலியா செல்ல அனுமதிக்கப்பட்டார்.

INDvsAUS Rohit Sharma Doubtful For Remaining Matches

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் ஆஸ்திரேலியா சென்ற ரோஹித் சர்மா அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் ரோஹித் சர்மா 14 நாட்கள் தனிமைப்படுத்தும் விதி காரணமாக இன்னும் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. அவர் இதுவரை அறைக்குள் தனிமைப்படுத்துதலிலேயே உள்ளார். இந்திய அணி வீரர்களுடன் இணைந்து அவர் பயிற்சி மேற்கொள்ள முடியாததால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட வாய்ப்பு இல்லை எனவே கூறப்படுகிறது.

INDvsAUS Rohit Sharma Doubtful For Remaining Matches

ரோஹித் சர்மா போதிய அளவில் வலைப்பயிற்சியில் ஈடுபட முடியாததால் அவருக்கு அணியில் வாய்ப்பு கொடுப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்துதல் முடிந்தும், இந்திய அணியுடன் இணைந்த பின் பயிற்சி வேண்டுமானால் மேற்கொள்ளலாம், ஆனால் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது எனவே பிசிசிஐ கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கே.எல் ராகுல், மயங்க் அகர்வாலை இந்திய அணியின் ஒப்பனர்களாக இறக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாகவும், மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் ரோஹித் சர்மா ஆடுவது கொஞ்சம் சந்தேகமாகவே உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. INDvsAUS Rohit Sharma Doubtful For Next Match Due To Lack Of Practice | Sports News.