மயங்க், பிரித்வியை விட 'அவரு' தான் சிறந்த டெஸ்ட் ப்ளேயர்...! - இந்திய வீரர் குறித்து ரிக்கி பாண்டிங்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் டெஸ்ட் தொடரில் பல மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இந்திய வீரர் குறித்து ரிக்கி பாண்டிங் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதமாகவே இந்தியா ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே ஒரு நாள் போட்டி முடிவடைந்து தற்போது டெஸ்ட் ஆட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.
மேலும் முதலாவது டெஸ்ட் தொடரில் சூப்பராக ஆடிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் மோசமான ஆட்டத்தால் வெற்றியை அடையாமல் போனது. மேலும் காயம் காரணமாக முகமது சமியும் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் ரிக்கி பாண்டிங் மற்றும் காவஸ்கர் இதுகுறித்து விவாதிக்கையில், 'ரோஹித் கண்டிப்பாக விளையாடுவார், மயங்க் மற்றும் பிரித்வியை விட சிறந்த டெஸ்ட் வீரர். கண்டிப்பாக டாப் ஆர்டரில் இடம்பெறுவார்' எனக்கூறினார். இந்த விவாதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
