'நடராஜனும் தான் அப்பா ஆனாரு...' அவர் மேட்ச விட்டுட்டு போனாரா...? 'அவருக்கு ஒரு நியாயம்...' கோலிக்கு ஒரு நியாயமா...? - இந்திய அணியின் முன்னாள் கேப்டன் காட்டம்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் ஆங்கில ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில், இந்திய அணிக்குப் புதிதாக வந்த டி.நடராஜன் அவர்களை ஒப்பிட்டு கேப்டன் விராட் கோலியை சாடியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 'தற்போது இந்திய அணிக்கு புதிதாக வந்த நடராஜன் டி20-யில் மிகப்பிரமாதமாக ஆடினார். மேலும் அவரின் யார்க்கர் நிறைந்த பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. ஐபிஎல் தொடரின் போதுதான், நடராஜனும் தன் முதல் குழந்தைக்குத் தந்தையானார். ஆனால், அவர் தன் குழந்தையை பார்க்க உடனடியாக நாடு திரும்பவில்லை. ஐபிஎல் தொடர் முடிந்து அமீரகத்திலிருந்து நடராஜன் நேரடியாக ஆஸ்திரேலியா சென்றார்.
நடராஜனின் அபாரமான பந்து வீச்சைப் பார்த்த பிறகு டெஸ்ட் தொடருக்காக அவரை அங்கேயே தங்க வைத்தனர். அணியில் விளையாடுவதற்காக அல்ல. வலை பயிற்சியில் அவர் பந்து வீசிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் , கேப்டன் முதல் டெஸ்ட் முடிந்தவுடன் தன்னுடைய முதல் குழந்தைப் பிறப்புக்காக நாடு திரும்புகிறார். இதுதான் இந்திய கிரிக்கெட் வாரியம். ஒருவருக்கு ஒரு விதி, இன்னொரு வீரருக்கோ மற்றொரு விதி. நீங்கள் என்னை நம்பவில்லை என்றால், ரவிச்சந்திரன் அஸ்வினை, நடராஜனை கேட்டு பாருங்கள்' என்று கடுமையாக சாடியுள்ளார்.

மற்ற செய்திகள்
