'தம்பி நட்டு... இங்க வாங்க'!.. இந்தியாவுக்கு கிளம்பும் முன்... நடராஜனை அழைத்துப் பேசிய கோலி!.. கடைசியா இருக்குற வாய்ப்பு 'இது' தான்!.. அற்புதம் நிகழுமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் கேப்டன் கோலி நாடு திரும்பும் முன் அணியில் இருக்கும் இளம் வீரர்களிடம் முக்கியமான மீட்டிங் ஒன்றை நடத்தி உள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.
இந்த நிலையில் டெஸ்ட் தொடர் தீவிரமாக நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி இரண்டு அணிகளுக்கும் இடையில் நடந்த நிலையில், இந்தியா இதில் படுதோல்வி அடைந்தது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அணியில் ஆடிய கேப்டன் கோலி மீதம் இருக்கும் டெஸ்ட் போட்டிகளில் இவர் ஆட மாட்டார். தனது மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்க உள்ளதால் இவர் இந்தியா திரும்புகிறார். நாளை இரவு இந்தியா திரும்ப உள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் கோலி நாடு திரும்பும் முன் அணியில் இருக்கும் இளம் வீரர்களிடம் முக்கியமான மீட்டிங் ஒன்றை நடத்தி உள்ளார். மீதம் இருக்கும் போட்டிகளில் இந்திய அணியின் இளம் வீரர்கள் எப்படி ஆட வேண்டும் என்று கோலி அறிவுரை வழங்கி உள்ளார். முக்கியமாக பிளேயிங் லெவனில் ஆட கூடிய வீரர்கள் குறித்தும் கோலி ஆலோசனை செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் யார் எல்லாம் ஆட வேண்டும், யார் எங்கே இறங்க வேண்டும் என்பது குறித்து கோலி ஆலோசனை செய்துள்ளார். இந்திய அணியில் அடுத்த போட்டியில் ஷுப்மான் கில், கே.எல் ராகுல், சிராஜ், ஜடேஜா ஆகிய வீரர்களிடம் கோலி நீண்ட நேரம் கலந்துரையாடி உள்ளார்.
அதேபோல் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் நடராஜனை அழைத்து கோலி நீண்ட நேரம் பேசி உள்ளார். நடராஜன் பவுலிங் போடும் விதத்தை கோலி பாராட்டி உள்ளார். வலைப்பயிற்சியில் நடராஜன் பவுலிங் செய்த விதத்தை கோலி பாராட்டி உள்ளார்.
இந்திய அணியில் ஷமி, இஷாந்த் சர்மா காயத்தில் உள்ளனர். இன்னும் ஒரு வீரர் காயம் அடைந்தால் நடராஜன் அல்லது ஷரத்துல் தாக்கூர் இந்திய டெஸ்ட் அணிக்குள் வர வேண்டி இருக்கும். இதனால் இவர்களை அணியில் இணைய தயாராக இருக்கும்படி கோலி குறிப்பிட்டுள்ளார். இவர்கள் இருவர் மட்டுமின்றி இன்னும் சில இளம் வீரர்களையும் சந்தித்து கோலி அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

மற்ற செய்திகள்
