‘6 முறை முதல் போட்டியை வென்று சாதனை’..‘முதல் முறையாக கேப்டன்’.. பரபரப்பான 2 -வது ஐபிஎல் போட்டி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 24, 2019 04:22 PM

ஐபிஎல்  ஐபிஎல் டி20 லீக் 12 -வது சீசனின் முதல் போட்டி நேற்று(23.03.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதன் தொடக்கப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.

KKR vs SRH: KKR won the toss

இதில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேற 17.1 ஓவரின் முடிவில் 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனைத் தொடர்ந்து 71 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவரின்  முடிவில் 71 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடென் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்துள்ளது. இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் தொடந்து 6 முறை முதல் போட்டியை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கேப்டனாக புவனேஸ்வர்குமார் முதல் முறையாக வழி நடத்துகிறார்.

Tags : #IPL #IPL2019 #DINESHKARTHIK #VIVOIPL #SRHVSKKR