'கிட்டத்தட்ட 40 வருஷம்'.. 100 முறைக்கு மேல் முயன்று திருவள்ளுவரை வரைஞ்சது யார் தெரியுமா?!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 06, 2019 06:18 PM

நீண்ட தாடி, எழுத்தாணி, ஓலைச்சுவடி, கம்பீர பார்வையுடன் மரப்பலகையில் அமர்ந்திருக்கும் திருவள்ளுவரை முதன்முதலில் வரைந்தவர் ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா.

VenuGopal Sharma created Tiruvalluvar art for 40 years

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், கக்கன், தோழர் ஜீவா, நாவலர் நெடுஞ்செழியன், கிருபானந்த வாரியார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மு.வரதராசனார், கவியரசர் கண்ணதாசன், எஸ்.எஸ்.வாசன் உள்ளிட்ட பலரும் அங்கீகரித்த திருவள்ளுவரின் திருவுருவப் படம்  1964-ம் ஆண்டு முதல்வராக இருந்த பக்தவத்சலத்தின் மூலம், அன்றைய துணை ஜனாதிபதி ஜாகீர் உசேனால் சென்னை சட்டசபையில் திறக்கப்பட்டது.

ஒரு சிலையில் உயிர், அந்தச் சிலையில் கண்களில் பிறப்பெடுக்கிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று உலகிற்கே கூறி உலகப்பொதுமறையாம் திருக்குறளைப் படைத்த அத்தகைய திருவள்ளுவரின் பிள்ளையார்ப்பட்டியில் உள்ள உருவச் சிலையின் கண்கள், அண்மையில் மர்ம நபர்களால் தார் பூசி மறைக்கப்பட்டன. மேற்கொண்டு அவர் ஆன்மீகவாதியா? அல்லது மதவாதியா? கடவுள் நம்பிக்கை அற்றவரா ? இல்லையா? முனிவரா? ஞானியா? என்பன போன்ற கருத்துக்களும் விவாதங்களும் சர்ச்சைகளும் உண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் திருவள்ளுவரின் ஓவியத்தைப் படைத்த கே.ஆர். வேணுகோபால் சர்மா இதற்காக 40 ஆண்டுகாலம் எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #THIRUVALLUVAR #STATUE