செல்போனை தூக்கிட்டு ஓட நெனைச்ச திருடன்.. ஷாக் ஆன உரிமையாளர்.. கடைசியா நடந்ததை அவரே எதிர்பார்க்கல.. வீடியோ.!
முகப்பு > செய்திகள் > உலகம்செல்போன் திருடன் ஒருவன் கடையில் இருந்து தப்பித்து ஓட முயற்சித்து பின்னர் திருடிய போனை உரிமையாளரிடமே கொடுக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read | "இது 'ஆ' தான்.."... டீச்சரிடம் மழலை மொழியில் வாதம் செய்த கியூட் சிறுவன் .. இணையத்தை கலக்கும் வீடியோ..!
சமூக வலைதளங்கள் எப்போதும் பல ஆச்சரியமான தகவல்களை மற்றும் வீடியோக்களை மிக விரைவில் பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்து விடும் வல்லமை படைத்தது. மக்களை சிரிக்க வைக்கும் விஷயங்கள் எப்போதுமே இணையத்தில் வெகு விரைவில் வைரலாகி விடுவது உண்டு. அதிலும் குறிப்பாக நகைச்சுவை மற்றும் எதிர்பாராத திருப்புமுனைகள் கொண்ட வீடியோக்கள் மற்றும் பதிவுகள் சமூக வலை தளங்களில் எப்போதும் கோடிக்கணக்கான மக்களிடையே அதிக அளவில் ஷேர் செய்யப்படும். அந்த வகையில் கடையில் இருந்து செல்போனை திருடிச் செல்ல நினைக்கும் ஒருவரின் வீடியோ தற்போது இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில் ஒரு செல்போன் கடையில் இரண்டு பணியாளர்கள் தங்களது வேலைகளை கவனித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது, கருப்பு நிற உடையணிந்து அங்கே வரும் இளைஞர் ஒருவர் போன்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். கடையின் உரிமையாளர் போல இருக்கும் ஒருவர் அந்த இளைஞருக்கு செல்போன்களை காட்டுகிறார்.
அந்த போன்களை ஆர்வத்துடன் அந்த இளைஞர் பார்ப்பது அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இதனையடுத்து, கையில் செல்போன் ஒன்றை வைத்திருந்த அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் செல்ல நினைக்கிறார். தொடர்ந்து அவர் அங்கிருந்து ஓடுகிறார். ஆனால், அந்த கடையின் நுழைவு வாயில் கதவை அவரால் திறக்க முடியவில்லை. அந்த கதவை பிடித்து அவர் ஆட்டியும் கதவு அசைவதாக இல்லை.
இதனால் தனது திருட்டு முயற்சியை கைவிட்ட அந்த இளைஞர் தலையை கவிழ்த்தபடி நடந்துவந்து தான் வைத்திருந்த போனை கடையின் உரிமையாளர் போன்று நின்றிருந்த நபரிடம் ஒப்படைக்கிறார். அதன்பிறகு அந்த இளைஞர் அங்கிருந்து செல்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரிட்டனில் உள்ள டியூஸ்பரி, மேற்கு யார்க்ஷயர் நகரில் உள்ள மொபைல் போன் கடையில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்நிலையில் இக்கட்டான சூழ்நிலையில் பொறுமையுடன் நடந்துகொண்ட கடையின் உரிமையாளரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
Don’t be an idiot pic.twitter.com/ldoXuFW4QB
— UOldGuy🇨🇦 (@UOldguy) December 12, 2022
Also Read | கர்ப்பமா இருந்தது தெரியாமலேயே விமான பயணம்.. நடுவானில் வந்த பிரசவ வலி.. பதறிப்போன பணியாளர்கள்..!

மற்ற செய்திகள்
