சாலை ஓரத்தில் வாழ்ந்து.. உயிரிழந்த மூதாட்டி.. சுருக்குப் பையை திறந்ததும் கலங்கி போன போலீஸ்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம் மாவட்டம், அண்ணா நகர் என்னும் பகுதியில் மூதாட்டி ஒருவர் யாசகம் செய்து வாழ்ந்து வந்ததாக தகவல்கள் கூறுகின்றது.

Images are subject to © copyright to their respective owners.
இவர் அப்பகுதியில், வீணாக குப்பையில் வீசப்படும் அட்டைப் பெட்டிகளை சேகரித்து அவற்றை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை சிறுக சிறுக சேமித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் தனக்கென வீடு எதுவும் இல்லாமல் இருந்த அந்த மூதாட்டி, சாலை ஓரம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி கொண்டும் தூங்கி வந்துள்ளார். மேலும் இவரை பற்றி அப்பகுதியில் உள்ளவர்களுக்கு தெரியும் சூழலில், சமீபத்தில் அந்த பாட்டி திடீரென உயிரிழந்து போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. உடல்நல கோளாறுகளால் அவர் உயிரிழந்ததாக சொல்லப்படும் நிலையில், அவருக்கென யாரும் இல்லாததால் காவல்துறையினர் மூதாட்டியின் உடலை சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Images are subject to © copyright to their respective owners.
இதனைத் தொடர்ந்து, அந்த மூதாட்டியின் உடைமைகளை கைப்பற்றிய போலீசார், அதனை சோதனை செய்து பார்த்த போது அவரிடம் இருந்த சுருக்குப்பை ஒன்று அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. போலீசார் அந்த மூதாட்டியின் சுருக்குப்பையை பார்த்த போது, அதற்குள் மொத்தம் சுமார் 27,000 ரூபாய் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றது. அதே போல, இவ்வளவு பணத்தை அவர் சேமித்து வைத்ததற்கான காரணமும் அவருக்கு மட்டும் தான் தெரியும் என்றும் தெரிகிறது.
Images are subject to © copyright to their respective owners.
இந்த நிலையில், அவர் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் செல்லக்குழந்தை என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் அவரது சுருக்குப்பையில் இருந்த 27,200 ரூபாய் பணத்தை அரசு கருவூலத்தில் சேர்த்துள்ளனர். வயதான காலத்தில் யாசகம் செய்து வாழ்ந்து வந்த மூதாட்டி, இத்தனை ஆயிரம் ரூபாயை சேர்த்து வைத்த விஷயம், பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
Also Read | 47 வருசத்துக்கு முன்னாடி காணாம போன மாணவன்.. உடல் பாகங்கள் கிடைச்சாலும் தொடரும் அந்த ஒரு மர்மம்!!

மற்ற செய்திகள்
