'எவ்வளவு அழகா ஏறி போறாங்க'...'நெகிழ வைத்த வனத்துறை'...இணையத்தில் ஹிட் அடித்த வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்By Jeno | Mar 30, 2019 01:27 PM
2 நாட்களாக சேற்றுக்குள் சிக்கித் தவித்த 6 யானை குட்டிகளை வனத்துறையினர் மீட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரத்திலிருந்து கிழக்குப் பகுதியில் அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது.அந்த வனப் பகுதியில் 1 முதல் 4 வயதுடைய 6 யானைக் குட்டிகள் தாய் யானையிடமிருந்து தவறுதலாக பிரிந்து அங்கிருந்த சேற்றுக்குள் சிக்கிக் கொண்டன.எவ்வளவு முயன்றும் அந்த யானைகளால் வெளியேற முடியாமல் தவித்து வந்தன.வழக்கமாக வனப்பகுதிக்குள் ரோந்து வரும் வனத்துறையினர்,யானைகள் சிக்கி கொண்டதை அறிந்து அவற்றை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
கால்களும், உடலும் பலவீனமடைந்த நிலையில், 2 நாட்கள் துதிக்கையை சேற்றுக்கு மேல் உயர்த்தியபடி சோர்ந்திருந்த யானைகளை மீட்க இரவு முழுவதும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.ஆனால் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் இரவில் மீட்பு பணியனாது நடைபெறவில்லை.இதையடுத்து இரவு முழுவதும் அங்கேயே தங்கிய வனத்துறை அதிகாரிகள் காலையில் மீண்டும் மீட்பு பணியை தொடர்ந்தார்கள்.
இதையடுத்து 6 யானைக்குட்டிகளும் ஒன்றன் பின் ஒன்றாக தடுமாறி வனத்துறை ஏற்படுத்திய மீட்பு பாதை வழியாக வெளியேறின.இரண்டு நாட்களாக சேற்றுக்குள் சிக்கியிருந்ததால்,குழிக்குள் இருந்து வெளியேறியவுடன்,யானை குட்டிகள் துள்ளி குதித்து ஓடின.ஆனால் ஒரு யானை மட்டும் வனத்துறைக்கு நன்றி சொல்வது போல் திரும்பி நின்று சிறிது நேரம் பார்த்துவிட்டு சென்றது. இந்த சம்பவம் வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.