VIDEO: செல்போனை பார்த்திட்டே ஓட்டைக்குள் விழுந்த வாலிபர்.. நல்லவேளை கீழே அது இருந்ததுனால பொழச்சிட்டாரு..!
முகப்பு > செய்திகள் > உலகம்செல்போனைப் பார்த்துக்கொண்டே சென்ற இளைஞர் ஒருவர் தரையில் துளை இருப்பதை அறியாமல் விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது.
செல்போன்
இன்றைய நவீன உலகத்தில் செல்போன் இல்லாத நபர்கள் மிகவும் குறைவு என்றே சொல்லலாம். சாப்பிடும்போது, வாக்கிங் போகும் போது, ஏன் பாத்ரூம் போகும்போது கூட ஒரு சிலர் செல்போனுடன் செல்கின்றனர். குறிப்பாக செல்போன் பயன்படுத்திக் கொண்டே சாலையில் சென்று விபத்துக்களும் நேரிடுகின்றன. அந்தவகையில் துருக்கியில் இளைஞர் ஒருவர் செல்போன் பார்த்துக்கொண்டே தரையில் உள்ள துளையில் விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
துருக்கி
துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் செல்போன் பார்த்துக்கொண்டே நடந்து சென்ற இளைஞர் ஒருவர், தரையில் திறந்துகிடந்த துளையின் வழியாக கீழே விழுந்ந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. தவறி கீழே விழுந்ததும், கீழ்தளத்தில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள அட்டை பெட்டிகளில் விழுந்ததால் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இது அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
இளைஞர்
இதுதொடர்பாக இளைஞர் அப்துல்லா மட் பேசுகையில், ‘நான் அதை கவனிக்கவில்லை. கீழே விழுந்தபோது பெட்டிகளின் மேல் விழுந்ததால், காயம் ஏதும் ஏற்படவில்லை. நல்ல வேளையாக அன்று பெட்டிகளை இறக்கிக் கொண்டிருந்தார்கள்’ என அவர் தெரிவித்துள்ளார்.