VIDEO: 'நிலநடுக்கத்த' கவரேஜ் பண்ணிட்டு இருந்தப்போ... 'திடீர்னு லைவ்ல வந்த ஒரு ஆள்...' - 20,000 பேர் நேரடியாக 'லைவ் ஸ்ட்ரீமில்' பார்த்த 'அந்த' காட்சி...!
முகப்பு > செய்திகள் > உலகம்நேரடி ஒளிபரப்பின் போது பத்திரிக்கையாளரின் செல்போனை பறித்து சென்ற திருடன் தனக்கே தெரியாமல் ஆயிரக்கணக்கானோருக்கு தனது முகத்தை காட்டிய வீடியோ மில்லியன் கணக்கில் வியூஸ் பெற்று வைரலாகி வருகிறது.
எகிப்த் தலைநகரான கெய்ரோவில் கடந்த செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் நிலநடுக்கம் குறித்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரிடமிருந்து செல்போனைப் பறித்துச் சென்றுள்ள்ளார்.
இந்த சம்பவம் குறித்தான செய்தி ஊடகங்களில் வெளியானதோடு, இதில் மற்றொரு சுவாரஸ்யமான சம்பவமும் நடந்துள்ளது. நிலநடுக்கம் குறித்தான தகவல்களை சேகரித்து கொண்டிருந்த ஊடகவியலாளர் தன்னுடைய மொபைல் போனில் லைவ்ஸ்ட்ரீம் ஆக்டிவேட் செய்துள்ளார்.
இதனை கவனிக்காத திருடனோ செல்போனை பிடுங்கி சென்ற நிலையில் அந்த லைவ் ஸ்ட்ரீமில் திருடன் பைக் ஓட்டும் போது சாதாரணமாக சிகரெட் பிடிக்கும் வீடியோவும், அந்த திருடனின் முகமும் ஒளிபரப்பாகியுள்ளது. இதனை அந்த நேரத்தில் சுமார் 20,000 பேர் நேரடியாக கண்டுள்ளனர்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருவத்தோடு இதனை 6.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் ஆயிரக்கணக்கான கருத்துகளையும் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
مراسل اليوم السابع كان طالع لايف يتكلم عن الزلازل التليفون اتسرق منه والواد اللي سرقه كمل اللايف 😂 pic.twitter.com/ZAyHXN53z6
— Yasmin Mahmoud (@M49828376Yasmin) October 19, 2021