இதுவரை 27 கல்யாணம் தான் சார் பண்ணியிருக்கேன்.. ஆமா 128 கிரெடிட் கார்டு எதுக்கு? போலீசாரை மிரள வைத்த முதியவர்
முகப்பு > செய்திகள் > இந்தியாஒடிசா: சுமார் 66 வயதான முதியவர் ஒருவர் இதுவரை 27 இளம் பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது.

திருமண ஆசை:
இந்தியாவின் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்தவர் 66 வயதான ரமேஷ் குமார் ஸ்வெயின். சுமார், 5 அடி 2 அங்குல உயரம் கொண்ட இவர் 10 ஆம் வகுப்பே படித்துள்ளார். இவர் சிறு வயது முதலே திருமண ஆசையில் பல பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து வந்துள்ளார்.
கணவர் மீது புகார்:
இந்நிலையில், கடந்த வருடம் மே மாதம் டெல்லி மாநகரில் வசிக்கும் பெண் ஒருவர் புவனேஸ்வர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தனது கணவர் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் 'தன்னுடைய கணவர் பல பெண்களை ஏமாற்றி பணத்தை ஏமாற்றியுள்ளார் எனவும், அவரைக் கைது செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணையில் வெளிவந்த உண்மை:
இதனை பார்த்து குழப்பமடைந்த காவல் துறையினர் இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து ரமேஷ் குமாரை கைது செய்தனர். விசாரணையில் புகார் அளித்த பெண்ணின் கணவர் இதுவரை 14 பெண்களை ஏமாற்றியது தெரியவந்ததுள்ளது.
அடிக்கடி இடம் மாற்றம்:
மேலும், அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அவர் மொத்தம் 27 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்துள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஒடிசா மாநில உதவி காவல் ஆணையர் சஞ்சீவ் சத்பதி கூறும்போது, 'ரமேஷ் குமார் ஒரு விலாசத்தில் நீண்ட நாட்கள் தங்கி இருப்பது இல்லை. தன்னுடைய இடத்தை அடிக்கடி அவர் மாற்றிக் கொண்டே இருந்துள்ளார். அவர் இதுவரை 27 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
128 போலி கிரெடிட் கார்டுகள்:
அதோடு, இதுவரை 10 மாநிலங்களைச் சேர்ந்த 27 பெண்களை பணத்துக்காக மணம் முடித்து இருப்பதும் கேரளாவில் 13 வங்கிகளிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததும் 128 போலி கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது' எனக் கூறியுள்ளார்.
2 கோடி ரூபாய் மோசடி:
இதோடு நிறுத்தாமல் ஹைத்ராபாத்தில் எம்.பிபிஎஸ் படிப்புக்கு இடம் பிடித்து தருவதாக சுமார் 2 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். அவரிடம் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், இன்னும் பல சித்து வேலைகள் கூட வெளிவர வாய்ப்பிருப்பதாக போலீசார் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
மகன் மப்புல இருக்குறப்போ.. அப்பா கொடுத்த அட்வைஸ்.. வெறியான மகன் செய்த கொடூரம்

மற்ற செய்திகள்
