லவ் பண்ற பொண்ணுங்கள உளவு பார்க்கும் 'டிடெக்டிவ்' வேலை!!.. லட்சத்தில் கொழிக்கும் 20 வயது 'யூத்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Pandidurai T | Jan 10, 2022 01:13 PM

அமெரிக்கா: 20 வயது இளைஞர் ஒருவர் பெண்களை நோட்டமிட்டு அவர்களுடனே ஊர் சுற்றி வாரம் ரூ1.48 லட்சம் சம்பாதித்து வருவதை கேட்டால் அசந்து போவீர்கள்.

Youngster earns 1.48 lakhs per week by flirting with girls

தனக்கு பிடித்த பெண் நல்லவரா, கெட்டவரா என்று தெரிந்த பின்பும் காதலை சொல்ல தயக்கம் இருக்கிறது. நமக்கு பிடித்த பெண்ணை கண்டாலே கரன்ட் ஷாக் அடித்தது போல் உடம்பெல்லாம் வேர்த்து விடும். ஆனால் இங்கு ஒருவர் காதலி நல்லவரா கெட்டவரா என்பதை நடிகர் சந்தானம் பாணியில் டிடெக்டிவ் வேலை செய்தும் பணம் சம்பாதித்து வருகிறார் என்றால் நம்புவீர்களா. ஆனால் அதுதான் உண்மை.

அமெரிக்காவின் அலபாமா மாகாணம், யார்க்உட் பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் லாக்.  20 வயது இளைஞரான இவர் டிடெக்டவாக இருந்து ஒருவரின் காதலி அவருக்கு உண்மையாக இருக்கிறாரா அல்லது பொழுதுபோக்கிற்காக காதலிக்கிறாரா என்பதை  கண்காணித்து பணம் சம்பாதித்து வரும் செய்தி வைரலாக பரவி வருகிறது.

Youngster earns 1.48 lakhs per week by flirting with girls

இவரிடம் வரும் நபர்கள் அவர்களது காதலி குறித்த முழு தகவல்களையும் கொடுத்து செல்வார்கள்.  சேவியர் முதலில் அவர்களை வலைதளத்தில் பின் தொடர்வார். பின்பு அந்த பெண் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து அவருடன் முகநூலில் நண்பராக அறிமுகம் செய்து கொண்டு சேட்டிங் செய்வார். 

"மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு தான்‌ தெரியும்" மொமண்ட்!.. IPS அதிகாரியின் நெகழ்ச்சி செயல்! வீடியோ..

சமூகவலைதளத்தில் பெண்களுடன் ஷேட்டிங்

முதலில் அப்பெண் தன்னிடம் எப்படி பேசுகிறார், அவரது எண்ணங்கள் என்ன என்பதை தெரிந்துகொண்ட பிறகு, டிடெக்டிவ் சேவியர் அப்பெண்ணை நேரில் சந்தித்து பேச முயற்சிபப்பார். இருவரும் தனியாக சந்தித்து உரையாடும்போது தனது காதலனை பற்றி ஏதேனும் சொல்கிறாரா என்பதை கவனிப்பார், அப்படியும் அந்த பெண் சொல்லவில்லை என்றால் இவரே அந்த பெண்ணிடம் இதற்கு முன்பு யார் யாருடன் உறவில் இருந்தீர்கள் என்பதை சகசமாக நண்பரை போன்று கேட்டு தெரிந்துகொள்வார். அப்பெண் தற்போது தனது  காதலனை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லையென்றால், அந்த பெண் அவரை உண்மையாக காதலிக்கவில்லை என்றும் அவரது நோக்கம் காதல் என்பதை சேவியர் ரிப்போர்ட் கொடுப்பார்.

Youngster earns 1.48 lakhs per week by flirting with girls

எது உண்மையான காதல்

ஒரு பெண்ணிடம் பேசி பழகும்போது அந்த பெண் முகநூலிலோ அல்லது நேரில் சந்திக்கும்போது அவர் தனது காதலரின் பெயர்,அவர் மீதான காதலை விவரித்தால் அவர் உண்மையாக இருக்கிறார் என்று அந்த நபரிடம் தெரிவித்துவிடுவார். காதலர்களை கண்காணிக்க சேவியர்  லாக் தனி கட்டணமே வசூலிக்கிறார்.

ஒரு நாள் இந்த பணியை செய்ய குறைந்த பட்சம் ரூ14 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார்.

அம்பானி வாங்கிய புது ஹோட்டல் - விலையை கேட்டா ஆடிப்போய்டுவீங்க..!

 

Youngster earns 1.48 lakhs per week by flirting with girls

சிலருக்கு இதை இலவசமாகவும், சிலருக்கு குறைந்த கட்டணத்திலும் செய்து தருகிறாராம். இவர் வாங்கிய குறைந்த பணம் ரூ744, அதிகபட்சமாக ஒருவர் தன் காதலியின் உண்மையை கண்டறிய இவருக்கு ரூ55 ஆயிரம் பணம் கொடுத்தாராம். இந்த தகவலை அவரே தற்போது டிக்டாக் வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் தனக்கும் இதேபோன்று செய்ய வேண்டும் என ஒரு பட்டாளமே கியூவில் காத்திருக்கிறது. தற்போது இவர் ரூ1.48 லட்சம் சம்பாதித்துள்ளாராம்.

Tags : #YOUNGSTER #EARNS 1.48 LAKHS #GIRLS #இளைஞர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Youngster earns 1.48 lakhs per week by flirting with girls | World News.