"2022'ல இப்டி எல்லாம் நடக்கும்.." துல்லியமா கணிச்ச இளம்பெண்??.. "இப்ப அதையே ஒரு பிசினஸா மாத்திட்டாங்களாம்.."

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Aug 16, 2022 07:33 PM

இளம் பெண் ஒருவர், 2022 ஆம் ஆண்டு என்னென்ன விஷயங்கள் பிரபலங்களின் வாழ்க்கையில் நடைபெறும் என்பதை கணித்து பட்டியலிட்டிருந்த நிலையில், அதில் நிறைய அப்படியே நடந்துள்ள சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

Young woman prediction about 2022 goes right

Also Read | "என்னைய யாருன்னு தெரியுதா??.." 48 வருஷம் கழிச்சு நடந்த 'சந்திப்பு'.. சிலிர்த்து போய் நின்ற பெண்.. 'சுவாரஸ்ய' பின்னணி

அமெரிக்காவின் Foxborough என்னும் பகுதியில் வசிப்பவர் Hannah Carroll. 19 வயதே ஆகும் இவர் தான், 2022 ஆம் ஆண்டில் என்னென்ன நடக்கும் என்பது பற்றி, சில கணிப்புகளை கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார். அதில், சுமார் 10 விஷயங்கள் வரை இத்தனை மாதத்திற்குள் நடந்தும் விட்டது தான், நெட்டிசன்கள் பலரையும் Hannah-வை நோக்கி திரும்ப செய்துள்ளது.

ஆனால், Hannah கணிப்பது எல்லாம் கிம் கார்தஷியன் உள்ளிட்ட பல தொலைக்காட்சி மற்றும் ஊடக பிரபலங்கள் தொடர்பான செய்திகளை தான். உதாரணத்திற்கு கிம் கார்தஷியன் மற்றும் டேவிட்சன் இந்த ஆண்டு பிரேக் அப் செய்வார்கள் என Hannah கணித்திருந்தார். அதன் படி, சமீபத்தில் அவர்கள் இருவரும் பிரிந்து கொண்டதாக தகவல்களும் வெளியாகி இருந்தது.

Young woman prediction about 2022 goes right

இதே போல, Rihanna, Megan Fox குறித்து இந்த ஆண்டில் Hannah கணித்த நிறைய விஷயங்கள், அப்படியே நடைபெறவும் செய்துள்ளது. அவர் ஏற்கனவே கணித்த விஷயங்கள் நடந்து வருவதால், அவரை ஏராளமானோர் பின் தொடரவும் செய்கிறார்கள். அது மட்டுமில்லாமல், தற்போது இதனை ஒரு தொழில் ஆகவே, Hannah தொடங்கியுள்ள நிலையில், மாதத்திற்கு சுமார்  £1,500 (இந்திய மதிப்பில் சுமார் 1.4 லட்சம் ரூபாய்) வரை  அவர் சம்பாதித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தங்களின் எதிர்காலம் தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள், ஹன்னாவுக்கு தங்களின் புகைப்படத்தை அனுப்ப வேண்டும் என கூறப்படுகிறது. அதனை பார்த்து, அவர்கள் வாழ்க்கை எப்போது மாறும், குழந்தை எப்போது கிடைக்கும் உள்ளிட்ட பல விஷயங்களை கணித்து அதற்கு கட்டணமாக பணமும் ஹன்னா வசூலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Young woman prediction about 2022 goes right

இது தொடர்பாக பேசும் Hannah, "பாப் கலாச்சாரம் மற்றும் பிரபலங்களை பின்பற்றி வருவதால், அது பற்றியே நிறைய நான் கணித்து வருகிறேன். ஏதோ ஒன்று நடப்பதை போல உள்ளுணர்வு, சிலரை பின் தொடர்ந்து அறிந்து கொள்ளும் போது வரும். அது மிகவும் வலிமையான உணர்வாகவும் இருக்கும். இப்போது பலரும் தங்களின் எதிர்காலம் பற்றி என்னிடம் கேட்டு நான் கணிக்கும் போது, அவை சரியாக நடப்பதாகவும் அவர்கள் என்னிடம் தெரிவிக்கின்றனர்" என Hannah கூறி உள்ளார்.

இன்னும் பல கணிப்புகள், அவர் 2022 ஆம் ஆண்டுக்குள் நடைபெறும் என குறித்து வைத்துள்ள நிலையில், அடுத்த நான்கரை மாதத்திற்குள் அவை அனைத்தும் நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Also Read | 19 வயது வித்தியாசம்.. காதலிச்சு திருமணம் செஞ்ச 'ஜோடி'.. பொண்ணோட அம்மா'வ பாத்ததும் மாப்பிள்ளைக்கு காத்திருந்த 'அதிர்ச்சி'!!

Tags : #YOUNG WOMAN #PREDICTION #PREDICTION ABOUT 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Young woman prediction about 2022 goes right | World News.