'தம்பி யாருடா நீ'... 'ஒரு ஓவருல இத்தனை சிக்ஸரா'... 'வச்சு விளாசிய இளம் வீரர்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Sep 10, 2021 11:43 AM

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இளம் வீரர் அதிரடியாக சிக்ஸர் அடித்துத் தெறிக்க விட்டுள்ளார்.

USA\'s Jaskaran Malhotra smashes 6 sixes in an over

ஓமனில் நேற்று நடந்த பப்புவா நியூ கயானாவுக்கு எதிரான 2-வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் ஆடிய அமெரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வீரர் ஜஸ்கரன் மல்கோத்ரா 124 பந்துகளில் 4 பவுண்டரி, 16 சிக்சருடன் 173 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

USA's Jaskaran Malhotra smashes 6 sixes in an over

அவர் கடைசி ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் காடி டோகா பந்து வீச்சில் 6 பந்துகளையும் சிக்ஸருக்கு அடித்து தும்சம் செய்தார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த 2-வது வீரர் மற்றும் ஒட்டு மொத்த சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டிய 4-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

சிக்ஸர் மன்னனாகப் புகழ்பெற்றுள்ள ஜஸ்கரன் மல்கோத்ரா இந்தியாவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜஸ்கரன் மல்கோத்ராவின் சிக்ஸர் வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. USA's Jaskaran Malhotra smashes 6 sixes in an over | Sports News.