தன்னைத் தானே திருமணம் செஞ்ச பெண்.. போஸ்ட் போட்ட 24 மணி நேரத்துல எடுத்த பரபர முடிவு!!..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Mar 15, 2023 03:11 PM

தன்னைத் தானே ஒருவர் அதிகமாக நேசிக்கும் போது, சிலர் அவர்களையே சுய திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் உண்டு.

Woman who married herself made divorce in next 24 hours

Also Read | "பேசாம நான் போயிடவா?" 😂.. புஜாரா பவுலிங் பார்த்து அஸ்வின் போட்ட கமெண்ட்.. பதிலுக்கு அவர் சொன்ன விஷயம் தான் அல்டிமேட்!!

Images are subject to © copyright to their respective owners.

கடந்த 2020 ஆம் ஆண்டு, பிரேசிலை சேர்ந்த மாடல் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டிருந்தார். அதே ஆண்டில் பட்ரிசியா கிறிஸ்டின் என்ற பெண்ணும் தன்னை தானே திருமணம் செய்து கொண்டு பரவலாக அறியப்பட்டிருந்தார்.

தன்னை தானே திருமணம்..

இதனிடையே, கடந்த ஆண்டு இந்தியாவின் குஜராத்தில் உள்ள வதோதரா பகுதியை சேர்ந்த ஷமா பிந்து என்ற பெண், கடந்த 2022 ஆம் ஆண்டு தன்னை திருமணம் செய்து கொண்டதுடன் மட்டுமில்லாமல், தனியாக தேனிலவுக்கும் சென்று பெரிய அளவில் இணையத்தில் வைரல் ஆகவும் அறியப்பட்டிருந்தார். அதே போல, ஷமா பிந்து தனியாக திருமணம் செய்து கொண்ட போது குடும்பத்தினர் முன்னிலையில் படுஜோராகவும் இந்த திருமண நிகழ்வுகள் நடைபெற்றது.

Woman who married herself made divorce in next 24 hours

Images are subject to © copyright to their respective owners.

ஒரே நாளில் நடந்த ட்விஸ்ட்..

இந்த நிலையில், தற்போது அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ள சூழலில், ஒரே நாளில் மற்றொரு ட்விஸ்ட்டும் நடந்துள்ளது. அர்ஜென்டினாவை சேர்ந்தவர் சோஃபி மௌரே. கடந்த சில தினங்களுக்கு முன்பாக தன்னை தானே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார். மேலும் தனது பதிவில், தன்னை தானே திருமணம் செய்து கொள்வதற்காக திருமண ஆடை மற்றும் கேக் உள்ளிட்டவற்றை தானே தயார் செய்வதாகவும் பதிவில் குறிப்பிட்டிருந்தார். அந்த திருமண உடையில் அவர் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட பலரும் பல விதமான கருத்துக்களையும் கமெண்ட் செய்து வந்தனர்.

Woman who married herself made divorce in next 24 hours

Images are subject to © copyright to their respective owners.

இதற்கிடையில், தன்னைத் தானே திருமணம் செய்த 24 மணி நேரத்தில் மற்றொரு பதிவையும் சோஃபியா மௌரே பதிவிட்டுள்ளார். அதில், தன்னால் இந்த திருமணத்தை தொடர முடியாது என்றும் விவாகரத்து செய்ய போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல், திருமணமான ஒரே நாளில் எப்படி விவாகரத்து செய்ய வேண்டும் என்றும் இணையத்தில் அவர் கருத்து கேட்டுள்ளார்.

Woman who married herself made divorce in next 24 hours

Images are subject to © copyright to their respective owners.

தன்னை தானே திருமணம் செய்து கொள்வது நிறைய இடங்களில் நடந்தாலும் 24 மணி நேரம் கழித்து அவர் எடுத்த முடிவு தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

Also Read | வீட்டு சுவற்றில் கருப்பு நிறத்தில் வழிந்த திரவம்.. பலகையை விலக்கி பார்த்ததும் தம்பதிக்கு காத்திருந்த ஆச்சரியம்!!

Tags : #WOMAN #MARRIED #MARRIED HERSELF #DIVORCE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman who married herself made divorce in next 24 hours | World News.