சிக்கலான கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையை வெற்றிகரமாக நிகழ்த்திய சென்னை காவேரி மருத்துவமனை

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Mar 15, 2023 02:00 PM

மருந்து பூசப்பட்ட பலூன்களை (DCB) பயன்படுத்தி சிக்கலான ஒரு கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி செயல்முறையை வெற்றிகரமாக செய்திருக்கிறது சென்னை காவேரி மருத்துவமனை. ஆம், அடைப்பு ஏற்பட்ட தமனியை விரிவாக்க இன்றைக்கு 95% ஆஞ்சியோபிளாஸ்டி செயல்முறைகளில் ஸ்டென்ட்கள் தேவைப்படுகின்றன; இந்த ஸ்டென்ட்கள் மீண்டும் குறுகுவதால் ஸ்டென்ட்-ஐ மீண்டும் பொருத்தும் செயல்முறை அல்லது பைபாஸ் அறுவைசிகிச்சை தேவைப்படக்கூடும். மருந்து பூசப்பட்ட பலூன் என்பது, ஸ்டென்ட் பயன்பாட்டை அவசியமற்றதாக்கி தமனிகளின் இயல்பான செயல்பாட்டை அப்படியே தக்க வைப்பதற்கான ஒரு புதிய மாற்று வழிமுறையாகும்.

Chennai Kauvery Hospital Conducts Complex Coronary Angioplasty

சென்னை, 14 மார்ச் 2023: தமிழ்நாட்டில் பன்முக சிறப்பு பிரிவுகளை உள்ளடக்கிய முன்னணி மருத்துவமனை சங்கிலித்தொடர் நிறுவனங்களுள் ஒன்றான காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான சென்னை காவேரி மருத்துவமனை, 74 வயதான ஒரு நபருக்கு மருந்து பூசப்பட்ட பலூன்களை (DCB) பயன்படுத்தி சிக்கலான ஒரு கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி செயல்முறையை வெற்றிகரமாக செய்திருக்கிறது. புதிய ஸ்டென்ட்களை சேர்க்காமல் லேசர் மற்றும் டிசிபி-ஐ பயன்படுத்தி இமேஜிங் தொழில்நுட்ப வழிகாட்டல்களுடன் இம்மருத்துவ செயல்முறையை சிறப்பான சிகிச்சை விளைவுடன் இதயவியல் மருத்துவர்களின் குழு இதனை செய்திருக்கிறது. ஸ்டென்ட் பொருத்துவதன் பக்கவிளைவுகளை இந்த புதுமையான சிகிச்சைமுறை நீக்கிவிடுகிறது; கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி-க்கு ஸ்டென்ட்கள் பொருத்தும் வழிமுறைக்கு ஒரு திறன்மிக்க மாற்று வழிமுறையாக இது இருக்கக்கூடும்.

திரும்பத்திரும்ப வரும் மார்பு வலி என்ற பிரச்சனையோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு இந்நபர் வருகை தந்தார்.

2018ம் ஆண்டில் இதயத்தில் இடது பிரதான பிரித்தல் ஸ்டென்ட்டிங் சிகிச்சை இவருக்கு செய்யப்பட்டிருந்தது. இந்த இரு ஸ்டென்ட்களுக்குள்ளும் குறுகலாகும் தீவிரப்பிரச்சனை ஏற்பட்டிருப்பதை ஆஞ்சியோகிராம் சோதனை வெளிப்படுத்தியது. முன்பு வைக்கப்பட்ட ஸ்டென்ட்கள் மீண்டும் குறுகலாவதினால் தமனிகள் சுருங்கி இருப்பதையே இது குறிக்கிறது. இந்த சிக்கலுக்கு தீர்வுகாண பைபாஸ் அறுவைசிகிச்சை என்பது, மருத்துவர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு விருப்பத்தேர்வாகும்; ஆனால், அதை செய்துகொள்ள அந்நபர் தயாராக இல்லை. அதற்கு மாறாக அதே அமைவிடத்தில் இன்னும் இரண்டு ஸ்டென்ட்களை பயன்படுத்துகிற ஆஞ்சியோபிளாஸ்டி செயல்முறையை திரும்பவும் செய்வது அதிக ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்று கருதப்பட்டது; அதே பகுதியில் அளவுக்கு அதிகமாக ஸ்டென்ட்களைப் பொருத்துவது, ஸ்டென்ட்டில் இரத்த உறைவு அல்லது மீள்குறுகல் என்பதற்கான ஆபத்தை இது அதிகரிக்கக்கூடும். அடைப்பு ஏற்பட்டுள்ள தமனியை விரிவுபடுத்த ஒரு ஸ்டென்ட் உட்செலுத்தப்பட்டு நிரந்தரமாக வைக்கப்படும் வழக்கமான ஸ்டென்ட் பொருத்தலைபோல் அல்லாமல் ஊதி விரிவாக்கப்பட்ட 60 நொடிகளுக்குள் பலூனின் மேற்பரப்பிலிருந்து மருந்துப் பொருளை (சிரோலிமஸ்) டிசிபி வெளியிடுகிறது; இதன் மூலம் ஸ்டென்ட் பொருத்துவதில் தொடர்புடைய இடர்களை இது நீக்கி விடுகிறது.

இதுகுறித்து சென்னை காவேரி மருத்துவமனையின் இதயவியல் துறையின் தலைமை நிபுணர் டாக்டர். K.P.சுரேஷ் குமார், ஆஞ்சியோபிளாஸ்டி செயல்முறைகளில் 25% வரை ஸ்டென்ட் பயன்பாட்டை டிசிபி அவசியமற்றதாக்கி விடலாம் என்று குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில், “அடைப்பு ஏற்பட்டுள்ள தமனியை விரிவாக்க நிரந்தரமாக ஒரு ஸ்டென்ட்-ஐ இன்றைக்கு 95% ஆஞ்சியோபிளாஸ்டி செயல்முறைகள் பயன்படுத்துகின்றன. எனினும், ஸ்டென்ட் தொடர்பான பிரச்சனைகளை இது உருவாக்கக்கூடும். இரத்தக்கசிவுக்கான இடரோடு குறைந்தது ஒரு ஆண்டு வரையாவது இரத்த அடர்த்தியை குறைக்கும் பல மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவது தேவைப்படும். ஸ்டென்ட் பொருத்துதல் மற்றும் மருந்து பூசப்பட்ட பலூன்கள் (டிசிபி) ஆகியவை ஒன்றுக்கொன்று பக்கபலமாக உதவக்கூடியதாக இருக்கலாம். இதற்கு பொருத்தமான நோயாளிகளிடம் இந்த இரண்டையும் இணைத்து நாம் பயன்படுத்தலாம். இச்செயல்முறை ஸ்டென்ட் பயன்பாட்டை குறைத்து, இரத்த நாளங்களின் இயல்பான செயல்பாட்டை தக்கவைக்க உதவும். பிரதான இரத்த நாளத்தில் ஸ்டென்ட் பொருத்தும் இரத்தக் குழாய் சுருக்கத்தை இரண்டாக பிரிப்பதற்கும் மற்றும் இரத்த நாளத்தின் சிறிய கிளைகளில் டிசிபி-ஐ பயன்படுத்துவதும் செயல்படுத்தக்கூடிய சிறப்பான விருப்பத்தேர்வாக இருக்கும். இந்தியாவில் கிடைக்கக்கூடிய சிரோலிமஸ் மருந்து பூசப்பட்ட பலூன், மேஜிக் டச் பலூன் என அழைக்கப்படுகிறது. இதன் பயன்பாடு குறித்து உலகளவில் மிகப்பெரிய தரவு கிடைக்கப்பெறுகிறது. யுஎஸ்-ஐ சேர்ந்த FDA அமைப்பு, இந்த பலூன் பயன்பாட்டுக்கு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியிருக்கிறது,” என்று கூறினார்.

அதிக எண்ணிக்கையில் நீரிழிவு நோயாளிகளை கொண்டிருப்பதால் உலகின் நீரிழிவு தலைநகரம் என்று அழைக்கப்படுகிற இந்தியா, சிறிய இரத்த நாளங்களில் அடைப்புள்ள அதிக எண்ணிக்கையிலான நபர்களைக் கொண்டிருக்கிறது. ஆகவே, சிறிய ஆரம் கொண்ட ஸ்டென்ட்களை நுழைத்து பொருத்துவதில் அது மீண்டும் குறுகலாவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்திய மக்களுக்கு மருந்து பூசப்பட்ட பலூன்கள் சிறப்பாக பயன்படக்கூடியவை. “ஸ்டென்ட் பொருத்தும் செயல்முறையிலிருந்து 3-6 மாதங்களுக்குப் பிறகு இரட்டை குருதித்தட்டுக்கு எதிரான சிகிச்சையை அவசியமற்றதாக ஆக்குவதற்கும் இந்த செயல்முறை உதவும். மருந்து பூசப்பட்ட பலூனை பயன்படுத்தி ஏறக்குறைய 100 சிகிச்சை செயல்முறைகளை நாங்கள் செய்திருக்கிறோம். பொருத்தமான மருத்துவ அம்சங்கள் இருக்கிற நோயாளிகளில் இது நல்ல பயனளிக்கும் திறன்மிக்க சிகிச்சையாக இருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது,” என்று டாக்டர். சுரேஷ் மேலும் கூறினார்.

இத்தாலி நாட்டின் மிலான் நகரில் அமைந்துள்ள EMO கொலம்பஸ் ஹார்ட் சென்டர் என்பதில் கார்டியாக் கேத் லேப் மற்றும் இதயவியல் இடையீட்டு சிகிச்சை துறையின் இயக்குநரும் மற்றும் இடையீட்டு இதயவியல் சிகிச்சையில் சர்வதேச அளவில் முன்னோடி என்றும் அறியப்படுபவருமான மருத்துவப் பேராசிரியர் அன்டோனியோ கொலம்போ, பல நேர்வுகளில் ஸ்டென்ட்களுக்கு ஒரு மாற்று வழிமுறையாக சிறப்பு மருந்து பூசப்பட்ட பலூன்கள் உத்தி உருவாகி வருகிறது என்று இக்கருத்தரங்கில் பேசியுள்ளார்.  ஆஞ்சியோபிளாஸ்டி செயல்தளத்தில் புதிய கதவுகளை இந்த புதுமையான உத்தி திறந்து வைத்திருக்கிறது. பொருத்தமான நோயாளிகளில் குறைவான ஸ்டென்ட் பொருத்துகிற அல்லது ஸ்டென்ட் பயன்பாடு இல்லாத ஆஞ்சியோபிளாஸ்டியை செய்வதற்கு இது உதவும், என்று அவர் விளக்கமளித்தார். காவேரி மருத்துவமனையில் நடத்தப்படுகிற ஒரு இடையீட்டு இதயவியல் சிகிச்சைக்கான பயிலரங்கிற்காக புரொபஸர் கொலம்போ சென்னைக்கு வந்திருந்தார்.

காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குநரான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் பேசும்போது, “பொதுமக்களுக்கு நம்பகமான, சிறந்த மற்றும் பொருத்தமான சிகிச்சை தீர்வுகளை வழங்க புதிய மற்றும் பரிசோதித்து நிரூபிக்கப்பட்ட மருத்துவ தொழில்நட்பத்தை செயல்படுத்துவதில் முன்னணியில் இருப்பது குறித்து காவேரி மருத்துவமனை பெருமைப்படுகிறது. இடையீட்டு இதயவியல் சிகிச்சை பிரிவில் இந்த புதுமையான டிசிபி செயல்முறை, ஒரு முக்கியமான மைல்கல்லை குறிக்கிறது. இப்புத்தாக்க செயல்பாட்டின் ஒரு அங்கமாக இருந்து வருவதில் சென்னை காவேரி மருத்துவமனை உள்ளபடியே பெருமிதம் கொள்கிறது. இம்மருத்துவமனை தொடங்கப்பட்ட நாளிலிருந்தே இதயவியலில் உயர்நேர்த்தி சிகிச்சை மையமாக இது பெயர்பெற்றிருக்கிறது. சிக்கலான இதயநோய்கள் மற்றும் பாதிப்புகள் இருந்த பல நோயாளிகளுக்கு நாங்கள் வெற்றிகரமாக சிகிச்சையளித்து குணப்படுத்தியிருக்கிறோம். புதிய தொழில்நுட்பங்களையும் மற்றும் ஹைபிரிட் அறுவைசிகிச்சை அரங்குகள், லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி, 3டி நேவிகேஷன் சிஸ்டம் போன்ற நவீன சாதனங்களையும் மற்றும் பொருத்தமான நோயாளிகளிடம் மருந்து பூசப்பட்ட  பலூன்களை பயன்படுத்துவது என்ற புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதிலும் நாங்கள் தொடர்ந்து முன்னணியில் இருந்துவருகிறோம்” என்று  தெரிவித்துள்ளார்.

Tags : #KAUVERY HOSPITAL #CHENNAI #COMPLEX CORONARY ANGIOPLASTY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai Kauvery Hospital Conducts Complex Coronary Angioplasty | Tamil Nadu News.