'மணப்பெண்'ணுக்கு உறுதியான 'கொரோனா'... இதுக்கு மேலயும் கல்யாணத்த தள்ளிப் போடக் கூடாதுன்னு சூப்பர் 'ஐடியா' செய்த 'ஜோடி'!!... இதயங்களை வென்ற 'ஃபோட்டோ'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தொற்று காரணமாக, உலக நாடுகள் அனைத்தும் கடந்த ஓராண்டாக முடங்கிப் போன நிலையில், கடந்த சில மாதங்களாக தான் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

அதே போல, ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருந்த பல திருமணங்களும் கொரோனா தொற்றின் காரணமாக தள்ளிப் போனது. இந்நிலையில், கலிஃபோர்னியாவைச் சேர்ந்த பேட்ரிக் டேல்கடோ மற்றும் லவுரன் ஜிமினிஸி ஆகியோரின் திருமணமும் கொரோனா தொற்று காரணமாக தள்ளிப் போனது.
இதனை கடந்த நவம்பர் மாதம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், இந்த திருமணம் தள்ளிப் போக மீண்டும் ஒரு காரணம் உருவாகியுள்ளது. திருமண பெண்ணான லவுரன் ஜிமினிஸிற்கு திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், லவுரன் ஜிமினிஸ் வருத்தமடைந்த நிலையில், மணமகனான பேட்ரிக் இனிமேலும் தங்களது திருமணத்தை தள்ளிப் போடக் கூடாது என்பதற்காக, வித்தியாசமான முறையில் இருவரும் செய்து கொண்ட திருமணம் நெட்டிசன்கள் இதயத்தை வென்றுள்ளது.
கொரோனா தொற்று ஏற்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள லவுரன் ஜிமினிஸ், தனது வீட்டின் முதல் மாடியின் ஜன்னலோரத்தில் திருமண உடையில் உட்கார்ந்திருந்தார். மணமகன் பேட்ரிக், அந்த வீட்டின் கீழே திருமண உடையுடன் நின்று கொண்டிருந்தார். இருவரையும் இணைக்கும் படி, ரிப்பன் ஒன்று கட்டப்பட்டிருந்தது. தங்களது வழக்கப்படி இவர்கள் திருமணம் நடைபெற்ற நிலையில், இது தொடர்பான புகைப்படங்களை அந்த புகைப்பட கலைஞர் தனது இன்ஸ்டாவில் வெளியிட, நெட்டிசன்களிடையே அதிகம் லைக்குகளை அள்ளிக் குவித்தது.
ஏற்கனவே, கொரோனா தொற்று காரணமாக, மூன்று முறை தங்களது திருமணம் தடைப்பட்டதாக கூறிய அந்த தம்பதியினர், சுமார் 10 விருந்தினர்களுடன் திருமணத்தை தற்போது நடத்தியுள்ளனர்.

மற்ற செய்திகள்
