பந்துகள் போல மாறும் வானம்..எப்படி உருவாகின்றன இந்த மேகங்கள்? ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Jun 30, 2022 02:48 PM

வளிமண்டத்தில் தோன்றும் இந்த வகை மேகங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், இதனால் பாதிப்பு இல்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

clouds that look like vape bubbles and cotton balls

Also Read | வெள்ளம் வந்தாலும் இனி கவலையில்ல.. 15 அடி உயரத்திலும் மிதக்கும் வீடுகளை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்..!

மேகங்கள் எப்போதும் நம்முடைய கண்களுக்கு விருந்தளிப்பவை. வளிமண்டத்தில் இருக்கும் காற்று, தட்பவெட்ப நிலை ஆகியவற்றின் காரணமாக மேகங்கள் வெவ்வேறு வடிவங்களை பெறுகின்றன. இவற்றில் சில மேகங்கள் அச்சமூட்டும் வகையில் காணப்படுகின்றன. அப்படி, கடந்த ஆண்டு அஜென்டினா நாட்டில் பந்துகள் போல வானம் மாறியது. இந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் மின்னெசோட்டா பகுதியிலும் இதே போன்ற மேகங்கள் உருவாகியுள்ளன.

மேகம்

தெரசா பிர்ஜின் லூகஸ் என்பவர் அமெரிக்காவின் ரோசெஸ்டரில் இருந்து பெமிட்ஜி நகரத்தை நோக்கி காரில் சென்றபோது, வானம் வித்தியாசமாக மாறியதை பார்த்திருக்கிறார். உடனடியாக மேகங்கள் பந்து போல மாறியதை கண்ட அவர் அதனை தனது கேமராவில் புகைப்படம் எடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்களை தனது நண்பர்களுக்கு தெரசா பகிர, கொஞ்ச நேரத்திலேயே இது வைரலாகிவிட்டது. வானம் அவிழ்ந்து இருப்பதை போல இருந்ததாக தெரசா சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த மேகங்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன.

clouds that look like vape bubbles and cotton balls

ஆபத்தில்லை

இந்த வகை மேகங்கள் மம்மடஸ் மேகங்கள் (mammatus clouds) என்று அழைக்கப்படுகின்றன. மேகத்தின் அடிப்பகுதியில் தொங்கும் பைகள் போன்ற வடிவத்தை இவை கொண்டிருக்கின்றன. இந்த பைகள் பொதுவாக குமுலோனிம்பஸ் எனப்படும் மழைமேகங்களால் உருவானது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இவை அருகில் உள்ள மேகங்களுடன் இணைந்து வளரக்கூடியவை. மம்மடஸ் என்ற பெயர் லத்தீன் மொழியில் உள்ள மம்மா என்பதிலிருந்து உருவானது. இதற்கு மாடு அல்லது மார்பகங்கள் என்று பொருள்.

WMO இன்டர்நேஷனல் கிளவுட் அட்லஸின் கூற்றுப்படி, இந்த மம்மடஸ் என்பவை, பல்வேறு வடிவங்களை தோற்றுவிக்கும் துணை மேகங்களாகும். இவை சில சமயங்களில் சீரான அல்லது வெவ்வேறு அளவுகளால் ஆன மேகங்களை தோற்றுவிக்கும். மம்மடஸ் ஆபத்தான மேகங்கள் அல்ல. ஆனால் அவை இடியுடன் கூடிய மழைக்கு முன் உருவாகலாம்.

Also Read | "சாண்ட்விச்-ல் மயோனைஸ் அதிகமா இருக்கு".. கோபத்தில் வாடிக்கையாளர் செஞ்ச செயல்.. ஊழியருக்கு நேர்ந்த சோகம்..!

Tags : #CLOUDS #VAPE BUBBLES #COTTON BALLS #CLOUDS THAT LOOK LIKE VAPE BUBBLES

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Clouds that look like vape bubbles and cotton balls | World News.