கார் சீட்டில் மர்ம காலடித் தடங்கள்.. திடீர்ன்னு பின் சீட்டில் கேட்ட 'குரல்'.. 3 நாட்களுக்கு பிறகு தெரிய வந்த அதிர்ச்சி 'உண்மை'
முகப்பு > செய்திகள் > உலகம்பெண் ஒருவரின் காருக்குள் காலடித் தடங்கள் இருந்த நிலையில், அதன் பிறகு தெரிய வந்த உண்மை, அவரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்தவர் Bethany Coker. இவருடைய கார் ஒன்றில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, பதற வைக்கும் சம்பவம் ஒன்றை பார்த்துள்ளார்.
தன்னுடைய காரின் சீட்டில், சேறு படிந்த காலடித் தடங்கள் இருந்துள்ளது. இதனைக் கவனித்த Coker, தன்னுடைய காரில் இரவு யாரோ தங்கிச் சென்றிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டுள்ளார்.
காலடித் தடங்கள்
தன்னுடைய குடும்பத்தினர் சிலருடன் வெளியே சென்ற Bethany, நள்ளிரவுக்கு பிறகு தான், காரினை நிறுத்தியுள்ளார். மறுநாள் காலையில் வந்து காரினை திறந்து பார்த்த போது, சேறு படிந்த காலடித் தடங்கள் இருந்துள்ளது. இதனால், சற்று பதற்றம் அடைந்த அவர், சேறினை சுத்தம் செய்துள்ளார்.
காருக்குள் கேட்ட சத்தம்
இதன் பிறகு, மேலும் சில நாட்கள் கழித்து தன்னுடைய கார் கண்ணாடியில், யாரோ மூச்சு விட்டதால் ஆவி படர்ந்து போய் இருப்பதனையும் Bethany கண்டு கொண்டுள்ளார். அடிக்கடி தன்னுடைய காரில் ஒருவரின் நடமாட்டம் இருப்பதை, Bethany உணர்ந்து கொண்டார். ஒரு பக்கம் மர்மமான சம்பவங்கள் நடந்து வந்த நிலையில், இவை அனைத்தையும் விட, வேறொரு பேரதிர்ச்சி, பெண்ணுக்கு காத்திருந்தது. காருக்குள் இருந்து, யாரோ 'ஹேய்' என அழைக்கும் சத்தம் கேட்டுள்ளது.
திகைத்து போன பெண்
முதலில் தன்னிடம் யாரோ விளையாடுகிறார்கள் என Bethany நினைத்துள்ளார். ஆனால், பிறகு தான் அப்படி எதுவுமில்லை. காருக்குள் யாரோ ஒரு மர்ம நபர் இருக்கிறார் என்பது, அவருக்கு தெரிய வந்துள்ளது. காரின் பின் பகுதியில், யாரோ ஒருவர் மறைந்திருப்பதைக் கண்டு திகைத்து போயுள்ளார் Bethany.
3 நாட்களாக பயணம்
'அவர் யார் என்பது எனக்குத் தெரியாது. என்னுடைய காருக்கு பின்னால் இந்த நபர், 3 நாட்களாக இருந்துள்ளார். அவரை வைத்துக் கொண்டு, நான் பல இடங்களுக்கு பயணம் செய்துள்ளேன். ஆனால், அப்போது எல்லாம் ஒரு வார்த்தை கூட அவர் பேசாமல் அப்படியே இருந்துள்ளார்' என தனக்கு நடந்தது பற்றி, மிகவும் அதிர்ச்சியுடன் Bethany விவரித்துள்ளார். தொடர்ந்து, போலீசாரை அந்த பெண் அழைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இப்படி ஒரு சம்பவத்தை எனது வாழ்நாளில் பார்த்ததே இல்லை என தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை
அங்கு வந்த போலீசார், அந்த நபரை வெளியேற்றிய சமயத்தில் நிர்வாணமாக இருந்துள்ளார். மேலும், அவர் காருக்குள் எப்படி வந்தார் என்பதும் சரி வர தெரியவில்லை. காருக்குள் இருந்த அந்த நபர், காணாமல் போனதால் தேடப்பட்டு வரும் நபர் என கூறப்படும் நிலையில், சற்று மனநிலை சரியில்லாத அவருக்கு, தற்போது மன நல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் காருக்குள், சுமார் 3 நாட்களுக்கும் மேலாக இருந்த மனிதர் ஒருவர் நிர்வாணமாக இருந்த செய்தி, பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
