ரூ. 23 கோடி மதிப்புள்ள காரில்.. 417 கி.மீ ஸ்பீடுல பறந்த கோடீஸ்வரர்.. அடேங்கப்பா, இந்த காருக்கு 1500 குதிரைகளோட திறன் இருக்காம்!
முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்ஜெர்மனி: நெடுஞ்சாலையில் அதிவேகமாக பயணித்த ஒருவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகமெங்கிலும் ரேஸ் பிரியர்கள் காணப்படுகிறார்கள். பைக் மட்டும் அல்லாமல் காரிலும் ரேஸ் செய்வதை விரும்புவது அதிகம். முறையாக பயிற்சி பெற்றவர்கள் ஒரு பக்கம் உண்டு என்றால் ஆர்வம் காரணமாக ஓட்டி பொதுமக்களை துன்பப் படுத்துகிறவர்களும் அதிகம். உலகிலேயே அதிவேகமாக இயங்கும் கார் வகைகளில் ஒன்றி புகாட்டி சிரோன். இதன் இந்திய மதிப்பு சுமார் 22 கோடியே 39 இலட்சம். வேகமாக பயணிக்க விரும்புகிறவர்கள் மட்டுமே இதனை வாங்கி உபயோகப்படுத்த ஆசைப்படுவர்.
புகாட்டி சிரோன் ஸ்போர்ட் கார்
இந்த கார் சுமார் 1500 குதிரைகளின் திறனை உடையது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு 450 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்குமாம். 1,479 bhp, 2.4 வினாடிகளில் 0-100 கிமீ வேகம், மற்றும் மணிக்கு 420 கிமீ வேகத்தில் (மின்னணு ரீதியாக வரையறுக்கப்பட்ட) செல்லவும் திறன் கொண்டது இந்த புகாட்டி சிரோன் ஸ்போர்ட் கார்.
அதிவேக புல்லட் ரயிலை விட வேகமாக செல்லக்கூடியது:
இன்றுவரை உலகின் அதிவேக காரில் ஒன்றான புகாட்டி சிரோன் ஸ்போர்ட் இடம்பிடிக்கிறது. கையால் செய்யப்பட்ட இந்த நான்கு சக்கர வாகனம் உலகின் அதிவேக புல்லட் ரயிலை விட வேகமாக செல்லக்கூடியது. இப்படி ஒரு செயல்திறனை வழங்க, சிரோன் ஸ்போர்ட் ஒரு 8.0 லிட்டர் குவாட்-டர்போசார்ஜ் செய்யப்பட்ட W-16 இன்ஜினைக் கொண்டுள்ளது.
அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாக புகார்:
இந்நிலையில், கோடிஸ்வரரான ராடிம் பாசர், ஜெர்மனியில் இருக்கும் பெர்லின்- ஹனோவர் இடையில் இருக்கும் 6 வழிச்சாலையில் சுமார் 417 கிலோமீட்டர் வேகத்தில் புகாட்டி சிரோன் ஸ்போர்ட் காரில் பயணித்திருக்கிறார். குறிப்பாக நெடுஞ்சாலையில் வேகக்கட்டுப்பாடு இல்லை. இருந்தாலும், அவர் பயணித்த வேகம் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
மேலும், வாகன பந்தய வீரர் ஜெபஸ்டின் உட்பட பல மக்களும் அந்த நெடுஞ்சாலையில் வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். அதுமட்டுமில்லாமல் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.