VIDEO: தண்ணி அடிச்சிட்டு 'கார்' ஓட்டிய நபர்...! 'குடிச்சிருக்கார்னு தெரிஞ்ச உடனே...' - 'டெஸ்லா' கார் செய்த வியக்க வைக்கும் செயல்...!
முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்தண்ணி அடித்துவிட்டு கார் ஓட்டிய ஓட்டுநரின் உயிரை அந்த காரே காப்பாற்றியிருப்பது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.
டெஸ்டா கார் நிறுவனம் உலக தரமான நவீன தொழிற்நுட்பம் மற்றும் அதன் பாதுகாப்பு வசதிகளுக்காக பெயர் பெற்றது. இந்த நிறுவனத்தின் தானியங்கி கார்கள் தான் மற்ற கார்களை விட மக்கள் அதிகமாக வாங்குகின்றனர்.
டெஸ்லா தானியங்கி காரை டிரைவர் சீட்டில் இருந்து ஓட்ட வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. ஆட்டோ பைலட் வசதியும் உள்ளது. இந்த நிலையில் நார்வேயில் தண்ணி அடித்துவிட்டு கார் ஓட்டிய ஒரு நபரை அந்த காரே காப்பாற்றியுள்ளது. அந்த நபர் போதையில் கார் ஓட்டிச் சென்ற போது அதை உணர்ந்துக்கொண்ட டெஸ்லா காரின் தொழிற்நுட்பம் உடனடியாக காரை அருகில் உள்ள பாதுகாப்பு பகுதியில் நிறுத்தியது மட்டுமல்லாமல் அவசர விளக்குகளையும் எரியவிட்டது .
சாதாரண காரில் அவர் சென்றிருந்தால் கட்டாயம் விபத்தில் சிக்கியிருக்கக்கூடும். ஆனால் டெஸ்லாவின் ஆட்டோ பைலட் தொழில்நுட்பத்தால் காப்பாற்றப்பட்டார். இந்த செய்தி வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வரகிறது.
Tesla owner in Norway suffers unconsciousness while driving, Tesla autopilot detects it, slows, comes to a stop so EMS can help @elonmusk @Tesla ❤️🩹🚑
— Austin Tesla Club (@AustinTeslaClub) July 31, 2021