VIDEO: காரில் இருந்து இறங்கி வந்து.. 'பப்பாளி' பழங்களை நடுரோட்டில் வீசிய பெண்.. கலங்கி போன பழக்கடைக்காரர்.. நடந்தது என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாசாலையில் செல்லும் போது பழக்கடை வண்டியால் தன் கார் மீது ஏற்பட்ட மோதலுக்காக பெண் ஒருவர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் தள்ளுவண்டியில் இருந்த பழங்களை பெண் ஒருவர் சாலையில் வீசியெறிவது போன்ற வீடியோ வெளிவந்து வைரலாகியது. தற்போது அந்த வீடியோ குறித்தான செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வைரலான வீடியோ:
சமூக ஊடகத்தில் சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியது. அதில், தள்ளுவண்டியில் இருந்து பப்பாளி பழங்களை பெண் ஒருவர் சாலைகளில் வீசி எறியும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
தள்ளுவண்டியில் உரசிய கார்:
இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அயோத்தியா நகரில் நடந்துள்ளது. அந்த வீடியோவில் சாலையில் பழங்களை வீசியெறிந்த பெண் தனியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. மேலும், அந்த பெண் வந்த கார் சாலையில் இருந்த தள்ளுவண்டி உரசியதாகவும், அப்போது இதில் காரில் சிறு கீறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடுப்பான அந்த பெண், தள்ளுவண்டியில் பழங்களை வைத்து விற்பனையில் ஈடுபட்ட நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒவ்வொரு பழங்களாக ரோட்டில் வீசிய பெண்:
மேலும், காரை சாலையின் ஓரத்தில் அந்த தள்ளுவண்டியில் இருந்த பழங்களையும் சாலையில் வீசி எறிந்துள்ளார். உச்சி வெயிலில் உழைக்கும் எளிய மனிதரை வேதனைப்படுத்திய காரியம் நெட்டிசன்கள் இடையே கொந்தளிக்க வைத்துள்ளது. பொருளாதார ரீதியாக உயர்ந்து காணப்பட்டால் எளிய மக்களை நசுக்கும் விதமாக நடந்துக் கொள்வது மனிதாபிமானம் அற்ற செயல் என பலரும் தெரிவித்துள்ளனர்.
காரில் வந்த அந்த பெண்ணின் செயலுக்கு நெட்டிசன்கள் மட்டும் அல்லாமல் பிரபலங்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், கார் புதிதாகவே இருக்க வேண்டும் என்றால் காரை வீட்டிலேயே வைத்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பாதுகாப்பாக இருக்கும் என்று பதிவிட்டு சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது அந்த மாநிலத்தின் உயர் அதிகாரிகள் பார்வைக்கும் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
