'இதுக்காக' தான் கடவுள் கொரோனாவ 'அனுப்பி' வச்சாராம்... நம்புறது 'எந்த' நாட்டு மக்கள்னு பாருங்க!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் கடவுளிடம் இருந்து வந்த செய்தி என 3-ல் 2 அமெரிக்கர்கள் நம்புகின்றனர்.
கடந்த 6 மாதங்களாக உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவால் ஒருபக்கம் அச்சம், மறுபக்கம் பொருளாதார தேவை, 3-வதாக வேலையின்மை இவற்றுடன் பசி, பட்டினி, பஞ்சம், பாதுகாப்பற்ற மனநிலை என எக்கச்சமான துன்பங்களை உலக மக்கள் அனுபவித்து வருகின்றனர். இன்னும் தடுப்பூசி கண்டறியப்படாததால் கொரோனாவின் கோரத்தாண்டவத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
இந்த நிலையில் தங்களின் நடவடிக்கையை மாற்றிக் கொள்வதற்காக கொரோனா கடவுளால் அனுப்பப்பட்ட செய்தி என அமெரிக்கர்கள் நம்புவதாக கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது. கடவுளை நம்பும் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் என்பது அமெரிக்கர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள சர்வ வல்லமையுள்ள கடவுளிடம் இருந்து வந்த செய்தி என நம்புகிறார்களாம்.
கொரோனா வைரஸ் என்பது மனிதர்களின் நடத்தையை மாற்ற எச்சரிக்கும் கடவுள் செய்தி என்று உறுதியாக நம்புவதாக, அசோசியேட்டட் பிரஸ் மற்றும் சிகாகோ பல்கலைக்கழக தெய்வீக பள்ளி ஆகியவை நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 90 ஆயிரம் பேர் அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.