‘இதுதான் உண்மையான சாதனை’.. உழைப்பால் உயர்ந்த அம்மாவும் மகளும்.. வைரல் புகைப்படம்!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Arunachalam | Mar 20, 2019 01:41 PM

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில்தான் இந்த அதிசய நிகழ்வு நடந்துள்ளது.

inspiring incident happened in delta airlines by mother and daughter

இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் செய்த அதிசய நிகழ்வு என பல செய்திகளை நாம் படித்திருக்கிறோம், ஆனால்  இதில் அம்மா - மகள் இருவரும்  அதிசய நிகழ்வு ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.

அமெரிக்காவில் வசித்து வரும் இந்த குடும்பத்தில் அம்மா மற்றும் மகள் இருவரும்  டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக பணியில் சேர்ந்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டாவிற்கு செல்லும் விமானத்தில் முதல் முறையாக இவர்கள் இருவரும் பைலட் மற்றும் கோ பைலட் ஆக விமானத்தை இயக்கியுள்ளனர்.

இந்த நிகழ்வையடுத்து அந்த இருவரின் புகைப்படத்தை வெளியிட்டு பெண்களின் கனவுகளுக்கு இது ஒரு முன்னுதாரணம் என குறிப்பிட்டுள்ளனர்.இந்த புகைப்படத்தை சமுக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படம் இப்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழகத்தைச் சேர்ந்த அம்மா- மகள் இருவரும், அரசுப் பணியாளர் தேர்வில் ஒரே நேரத்தில் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : #WOMEN INSPIRATION #DELTA AIRLINES #UNITED STATES