'அடேய்... நான் எல்லாம் எங்க ஊருல எவ்ளோ பெரிய டான் தெரியுமா?.. இங்க வாய்ப்பு கிடைக்குமானு கூட தெரியல'!.. ஸ்மித்துக்கு வந்த சோதனைய பாருங்க!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி அணிக்காக முதல் முறையாக ஆடவுள்ள ஸ்டீவ் ஸ்மித்திற்கு வாய்ப்பு கிடைக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னணி வீரரான ஸ்டீவ் ஸ்மித் கடந்த ஆண்டு வரை ராஜஸ்தான் அணிகாக ஆடி வந்தார்.
ஆனால், கடந்த ஆண்டு கேப்டனாகவும், ஒரு பேட்ஸ்மேனாகவும் அவர் மிக மோசமாக செயல்பட்டதால் இந்த ஆண்டு விடுவிக்கப்பட்டார். இதனால் இந்த முறை டெல்லி அணி அவரை அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது.
டெல்லி அணியின் டாப் ஆர்டரில் ஷிகர் தவான், ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட் என ப்ளேயர்கள் உள்ளதால் புதிதாக வந்துள்ள ஸ்டீவ் ஸ்மித்திற்கு அணியின் ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் எனக்கூறப்படுகிறது. உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் அவருக்கு இப்படி ஒரு நிலைமையா என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டின், ஸ்டீவ் ஸ்மித்திற்கு தொடர்ந்து அணியில் வாய்ப்பு கிடைக்காது. ஆனால், அப்படி கிடைத்தால் அவர் டாப் 3 இடங்களில் களமிறக்கப்படுவார். இந்த ஆண்டு ஐபிஎல்-ல் விளையாட ஸ்மித் மிக மிக ஆர்வமாக எதிர்நோக்கியுள்ளார் என தெரிவித்துள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித் நீண்ட நாட்களாக விளையாடி வந்த ராஜஸ்தான் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதால், அவர் நிச்சயம் தனது ஆட்டத்தை நிரூபிக்க காத்திருப்பார். எனவே, அவருக்கு டெல்லி அணியில் ஆட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அவரின் ஆட்டத்தால் அவருக்கும் டெல்லி அணிக்கும் இது சிறந்த ஆண்டாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி இந்த முறை ரிஷப் பண்ட் தலைமையில் களமிறங்குகிறது. கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை சென்ற டெல்லி அணி தோல்வியை சந்தித்தது. எனவே, இந்த ஆண்டு கோப்பையை வெல்ல ஸ்மித்தை அணியில் சேர்த்துக்கொண்டால், அவரின் அனுபவமும், ஆட்டமும் உதவியாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.