'கர்ப்பம்' தரிக்குறது 'பொண்ணுங்க' மட்டும் இல்ல...! 'சும்மா விஷயம் தெரியாம பேசிட்டு இருக்காதீங்க...' - 'எமோஜி' சம்பந்தமாக கிளம்பியுள்ள சர்ச்சை...!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்இனி ஆண்களும் கர்ப்பமாக இருப்பது போன்ற புதிய வகை எமோஜிகள் (Emoji) வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு யூனிகோட் (Unicode) ஸ்மார்ட்போன் நிறுவனம் 37 புதிய எமோஜிகளின் தொகுப்பை வெளியிட இருப்பதாக தகவல் வெளியானது. அதில், ஆண்களும் கர்ப்பமாக இருக்கும் எமோஜியும் அடக்கம். அதையடுத்து, இம்மாதிரியான எமோஜிகளை அனுமதிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து ஒரு சர்ச்சை உருவானது.
அதோடு, இந்த சமூகத்தில் இருக்கும் திருநம்பிகளும் ஒரு சில நேரங்களில் கர்ப்பமடைகின்றனர்' என எமோஜிபீடியா குழு கூறியுள்ளது.
சட்டப்படியும் கர்ப்பம் என்பது பெண்களின் உடலுக்கு மட்டும் நிகழக் கூடியது அல்ல என ஹார்வார்டு பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் ஜெசிகா கிளார்க் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், ஆண்கள் வயிறு பெரிதாக இருக்கும் இந்த எமோஜி பிரசவத்தைக் குறிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படாது என்று யூனிகோட் அமைப்பு விளக்கியுள்ளது.
இது 'மதிய உணவில் நீங்கள் அதிகமாக சாப்பிட்ட பிறகு அந்த சங்கடமான உணர்வைக் குறிக்கவும் பயன்படுத்தப்படும் என கூறுகிறது. மேலும், இப்போது வெளியிடப்படும் எமோஜிகளில் கர்ப்பிணி ஆண்களை தவிர, உதட்டை கடிக்கும் எமோஜி, வணக்கம் சொல்லும் எமோஜி, வியக்கும் முகத்தை கொண்ட எமோஜி போன்ற பல எமோஜிகள் வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளது.
இவை எமோஜிகள் அனைத்தும், பெரும்பாலும் 2021-ஆம் ஆண்டு ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.