'லேடீஸ்'கிட்ட பேசுறதுல 'நம்ம பசங்க' கொஞ்சம் வீக்...! 'அதுக்கு ஸ்பெஷல் கோச்சிங் கொடுக்கலாம்னு இருக்கோம்...' என்ன பாடு படப் போறோமோ...!- மனம் உடைந்து 'அழும்' பெண்கள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்இஸ்லாமிய அடிப்படை தீவிரவாத இயக்கமான தாலிபான் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் பெண்களை குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
அதில், 'எங்கள் தாலிபான்கள் இதற்கு முன் பெண்களிடம் நடந்து கொண்டதை வைத்து இப்போதும் எடை போடாதீர்கள். அவர்களுக்கு பெண்களிடம் எப்படி நடந்துக்கொள்வது, பெண்களுடன் எப்படிப் பேசுவது என்று பயிற்சி அளிக்கப்படவில்லை.
இப்போது நாங்கள் எங்கள் தாலிபான் படைகளுக்கு பயிற்சியளிக்க உள்ளோம். எனவே, பெண்கள் பாதுகாப்பு கருதி இந்த சூழ்நிலை மாறும் வரை வீட்டில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இது சிறிது காலத்திற்கு மட்டுமே, பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டவுடன் பணிக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்' எனக் கூறியுள்ளார்.
இந்த செய்தி தற்போது உலகளவில் திரும்பி பார்க்க செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் தாலிபான் ஆட்சியில் பொதுவாக பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது, அடிமைப்படுத்தப்படுவார்கள் எனக் கூறப்பட்டது.
இப்போது ஜபிபுல்லா முஜாஹித்தின் இந்த அறிவிப்பு ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை ஒப்புக்கொண்டதாக தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.